ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியின் 58வது பதிப்பு: புகைப்படத் தொகுப்பு

ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியின் 58வது பதிப்பில் கர்நாடகாவின் சினி ஷெட்டி கிரீடம் வென்றார். விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள JIO வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 இன் சிறப்புத் தருணங்கள் உங்களுக்காக...

ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டியின் 58வது பதிப்பில் கர்நாடகாவின் சினி ஷெட்டி கிரீடம் வென்றார். விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை, மும்பையில் உள்ள JIO வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 இன் சிறப்புத் தருணங்கள் உங்களுக்காக...

1 /7

கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், மகாராஷ்டிராவின் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் சினி ஷெட்டி. நிதித்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஷெட்டி, தற்போது பட்டய நிதி ஆய்வாளர் (CFA)க்கான தொழில்முறை கல்வியை கற்று வருகிறார்.  

2 /7

பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் மற்றும் நடனக் கலைஞர் லாரன் காட்லீப் ஆகியோர் தங்களது அற்புதமான மற்றும் ஆற்றல்மிக்க நிகழ்ச்சிகளால் கலக்கினார்கள்.

3 /7

ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த நிகழ்வில் நேஹா, மலாக்கா அரோரா, டினோ மோரியா, வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா, சீஸ் நடன இயக்குனர் ஷியாமக் தாவர் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் அடங்கிய ஜூரி குழு இருந்தது. (புகைப்படம்: ட்விட்டர்)

4 /7

நேஹாவின் கிரீடத்தை வென்று 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், நேஹாவுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நேஹாவின் பெற்றோர் பிரதீப் சிங் தூபியா மற்றும் மான்பிடர் தூபியா ஆகியோர் தங்கள் மகளைக் கௌரவித்தனர். நேஹாவின் கணவரும் நடிகருமான அங்கத் பேடி, மகள் மெஹர் மற்றும் மகன் குறிக் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். (புகைப்படம்: ட்விட்டர்)

5 /7

ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபால் ஷெகாவத், முதல் ரன்னர் அப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷினாதா சவுகான், இரண்டாவது ரன்னர் அப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

6 /7

சினி ஷெட்டி பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார், 4 வயதில் இந்திய பாரம்பரிய நடனமான பரதத்தைக் கற்கத் தொடங்கினார். 14 வயதில் அரங்கேற்றம் செய்தார்.  

7 /7

கடந்த ஆண்டு அழகிப் பட்டம்  மிஸ் இந்தியா 2021 மானசா வாரணாசி, சினி ஷெட்டிக்கு கிரீடம் சூட்டினார்.