பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது! தமிழக போலீசார் நடவடிக்கை!

திரௌபதி, பகாசுரன், ருத்திரதாண்டவம், பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

1 /6

திரைப்பட இயக்குனர் மோகன் ஜியை காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாசர்பாடியில் உள்ள இல்லத்திற்கு இன்று காலை வந்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.  

2 /6

சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேட்டி அளித்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்ய கைது செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

3 /6

மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பதிவு செய்துள்ளார்.  

4 /6

"என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை" திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.  

5 /6

கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என்று பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.  

6 /6

கடந்த சில தினங்களாக திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கலந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மோகன் ஜி பழனி பஞ்சாமிர்தம் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார்.