Breakfast Diet for Weight Loss: உடல் பருமன் குறைய மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சிதை மாற்றும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு உதவும் வகையில் காலை உணவு இருக்க வேண்டும். அதோடு குறைந்த கலோரி கொண்ட உணவாகவும் இருக்க வேண்டும்.
உடல் பருமன் என்பது ஒரு நோய் இல்லை என்றாலும், உடலை நோயின் கூடாரமாக ஆக்கிவிடும் ஆபத்து இருப்பதால் உடல் பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு காலை உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டியவை மற்றும் கட்டாயம் சாப்பிடக் கூடாதவை பற்றி அறிந்து கொள்ளலாம்.
காலை உணவு என்பது மிக முக்கியமான உணவு. அன்றைய நாளுக்கான ஆற்றலை அள்ளித் தரும் உணவாக இருக்க வேண்டும் என்பதோடு, உடல் கொழுப்பை எரிக்கும் வகையில், நமது மெட்டபாலிசத்தை தூண்டும் ஆற்றல் படைத்ததாகவும் குறைந்த கலோரி உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
காலை உணவு: நாம் இரவில் தூங்கும் போது நமது வளர் சிதை மாற்றம் மந்தமாகி விடுவதால், காலையில் சாப்பிடும் உணவு மெட்டபாலிசத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் உடன் பருமனை குறைப்பது சாத்தியமாகும். இந்நிலையில் காலை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
உலர் பழங்கள் மற்றும் விதைகள்: உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உலர் பழங்கள் மற்றும் விதைகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஊட்டச்சத்தின் களஞ்சியமாக இருக்கும் உலர் பழங்கள், உடல் மூளை இரண்டையும் ஆற்றலுடன் வைத்துக்கொள்ளும் திறன் படைத்தவை.
பரோயோட்டிக் உணவுகள்: செரிமானம் சிறப்பாக இருந்தால்தான், உடல் எடை குறையும். எனவே செரிமானத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட ப்ரோ பயோடிக் உணவுகள் அவசியம் தேவை. காலையில் இட்லி, தோசை ஆகியற்றை உண்பது சிறந்த தேர்வாக இருக்கும். அதனுடன் சிறந்த ப்ரோ பயோடிக் குணமான தயிரும் இருப்பது சிறந்தது.
பழங்கள்: பருவ கால பழங்கள் நிச்சயம் டயட்டில் தேவை. இவற்றை ஜூஸாக அல்லாமல், முழுமையாக சாப்பிடுவதால், ஊட்டச்சத்தை முழுமையாகப் பெறலாம் என்பதோடு, நார்ச்சத்தும் வீணாகாமல் நமது உடலில் சேரும்.
ரெடி டு ஈட் வகை உணவுகள்: கடைகளில் பேக்கேஜ்களில் விற்கப்படும் சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்கள், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றில் அளவிற்கு அதிகமான சர்க்கரை உள்ளது என்பதால், காலை உணவில் இதை தவிர்ப்பது மிக அவசியம்.
சான்ட்விச்சுகள்: பிரட்டினால் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச் வகைகள் அதிக கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்டவை. எனவே இது காலை உணவிற்கு ஏற்றதல்ல. மேலும் இதில் சோடியமும் அதிகம் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.