டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி இடம்பெறும் குரூப்பில் 2 டம்மி டீம்கள் வர இருக்கின்றன.
டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துவிட்டன.
இந்த சூழலில் அமெரிக்காவை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணி இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகள் முறையே அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை இந்திய அணி வீழ்த்தியிருந்தது.
இதனால் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் அமெரிக்காவும், பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. கடைசி இரண்டு இடங்களில் அயர்லாந்து, கனடா அணிகள் உள்ளன.
கடைசி லீக் போட்டியில் கனடா அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி குரூப்பில் எந்தெந்த அணிகள் இடம்பெறும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் ஒருவேளை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாவிட்டால் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது நெதர்லாந்து அணிகள் இடம்பெற வாய்ப்புள்ளது.
அப்படியானால், இந்த இரண்டு அணிகளை இந்திய அணி வீழ்த்தினாலே எளிதாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். அந்தவகையில் இப்போதே இந்திய அணியின் டி20 உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.