Dehydration: கொளுத்தும் வெயிலில் நீரிழப்பில் இருந்து காத்துக் கொள்ள சில எளிய டிப்ஸ்

கோடை காலம் துவங்கி விட்டால் நீர்ச்சத்து குறைபாடு பிரச்னையும் வரும். கொளுத்தும் வெயிலில் நீர் சத்து குறைபாட்டில் இருந்து உங்களை காத்துக் கொள்ள சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். வெயில் காலத்தில் சந்திக்க வேண்டிய ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தவிர்க்கவும், வெப்பம் மற்றும் வியர்வையால் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனையை தவிர்க்கவும் ஆன சில வழிகளை பார்ப்போம்.

1 /5

சித்திரை தொடங்கும் முன்னரே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. அதனால் கவனக்குறைவாக இருந்தால்  ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல பிரச்சனைகளை sஅந்திக்க நேரிடும்.  எனவே உங்கள் உடல் நலனை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

2 /5

கோடையில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்னை வராமல் இருக்க,  தண்ணீர் அதிக குடிப்பது மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிகப்படியான வியர்வையால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படுகிறது. குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழப்பினால் மயக்கம் கூட ஏற்படலாம்.

3 /5

நீரிழப்பை தவிர்க்க விரும்பினால், உங்கள் உணவில் சாறு நிறைந்த பழங்களை சேர்க்க முயற்சிக்கவும். கோடையில் கிடைக்கும் பழங்களான தர்பூசணி, திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இதன்  மூலம் உடலுக்கு  நீர் சத்துடன் நார்ச்சத்து, ஆற்றல், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின்கள் என பல சத்துக்கள் கிடைக்கும்.  

4 /5

ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீர் , உடலில் உள்ள நீர் சத்தை பாதுகாப்பதில் வியக்கத்தக்க நன்மைகளை கொடுக்கும்.  எலுமிச்சை ஜூஸ் தயாரித்து உங்களுடன் எப்போதுமே வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இது வெப்பத்தைத் தணிப்பதில் மிகவும் பயனுள்ள ஜூஸ். ஆனால் பேக் செய்யப்பட்ட ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

5 /5

கோடையில் இருந்து தப்பிக்க மட்டுமல்லாது, நல்ல ஆரோக்கியம் மற்றும் சிறந்த சருமத்திற்கு இளநீர் மைகச்சிறந்தது. இளநீரில் பொதுவாக பழச்சாறுகளை விட குறைவான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இது பொட்டாசியம் சத்தின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது.