SSY vs MSSC: பெண்களுக்கு பம்பர் லாபம் அளிக்கும் சேமிப்பு திட்டம் எது?

SSY vs MSSC: தபால் துறையின் பல திட்டங்கள் பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்படுள்ளன. அவற்றில் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் (MSSC) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) ஆகியவை மிகவும் பிரபலமானவை.

SSY vs MSSC: தபால் அலுவலகம் நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கான சில பிரத்யேக திட்டங்கள் இங்கு உள்ளன. 2023 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தேவைக்கேற்ப மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். SSY, MSSC ஆகிய திட்டங்களின் விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /7

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகிய இரு திட்டங்களும் பெண்களுக்கு பல நன்மைகளை அளிக்கும் திட்டங்களாக உள்ளன. இரண்டு திட்டங்களும் பெண்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலீடு செய்து பெண்கள் வலுவான வருமானத்தைப் பெறலாம். 

2 /7

இந்தத் திட்டத்தில் அனைத்து வயது பெண்களும் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ 2 லட்சம் ஆகும். 2 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து, 7.50 சதவீத நிலையான வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம். 

3 /7

இந்தத் திட்டத்தின் கீழ், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ரூ.1.50 லட்சம் தள்ளுபடியும் கிடைக்கும். 

4 /7

சுகன்யா சம்ரித்தி யோஜனா 2014 ஆம் ஆண்டு மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தை தொடங்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து பெரும் வருமானத்தைப் பெறலாம். பெண் குழந்தை 18 வயதைத் தாண்டிய பிறகு டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரை எடுக்கலாம்.

5 /7

பெண் குழந்தைக்கு 21 வயதாகும் போது முழுத் தொகையையும் எடுக்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பெற்றோருக்கு பெண்ணின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளில் உதவி கிடைக்கும். அரசாங்கம் தற்போது இந்த திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

6 /7

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களும் பெண்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் MSSC ஒரு குறுகிய கால சேமிப்புத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. SSY ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும்.

7 /7

பெண் குழந்தையின் கல்வி, திருமண செலவுகளுக்காக பணத்தை சேர்க்க எண்ணும் பெற்றோர் SSY திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத்தில் அதிக வருமானத்தைப் பெற நினைப்பவர்கள் MSSC கணக்கில் முதலீடு செய்யலாம்.