Bedroom Tips: படுக்கையறை வாழ்க்கையை சுவையாக்க ஈசியான டிப்ஸ், இதற்காக என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?
Bedroom Tips Healthy Foods Tamil: மனிதர்களுக்கு பசி, தூக்கம் போல, பாலியல் உணர்வுகளும் வருவது சகஜம். அந்த பாலியல் உணர்வுகள் சமயங்களில் வெவ்வேறு காரணங்களினால், சுவை குறைவாக மாறி விடும். இதனை அதிகரிக்க, சில உணவுகள் உதவும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
மனிதர்களுக்கு அனைத்து உணர்வுகளை போலவும், பாலியல் உணர்வுகளும் மிகவும் சகஜமானது. இந்த வாழ்க்கை, பல சமயங்களில் காரணமே இல்லாமல் சுவை இன்றி போகும். இது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளின் வெளிபாடாகவும் இருக்கலாம்.
டயட்டில், ஒமேகா 3 ஆசிட்கள் நிறைந்த உணவுகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதனால் பாலியல் வாழ்க்கை நன்றாக அமையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?
வெங்காயம், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகளை அதிகரிக்கும். ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அளவை அதிகரித்து, இன்சுலின் அளவையும் அதிகரிக்கும். இதனால் உடலுறவு வாழ்க்கையும் சிறக்கும்.
உடலுறவு வாழ்க்கையை மேலும் சிறக்க வைக்கும் உணவுகளுள் ஒன்று, மாதுளம்பழம். மாதுளம்பழ சாறு, பாலியல் உணர்வுகளை அதிகரிக்கும். இதை சாப்பிடுவதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால், உடலுறவுக்கு ஏற்ற மன நிலையும் உருவாகும்.
கீரை வகை உணவுகளில் மாக்னீசியம் மற்றும் இரும்பு சத்துகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு உடலுறவுக்கு ஏற்ற மன நிலையை தயார் செய்வதற்கு இந்த வகை உணவுகள் உதவும். இதை சாப்பிடுவதனால் உடலுறவின் போது ஆற்றலும் அதிகரிக்கும்.
நல்ல கொழுப்புகள் நிறைந்த உனவுகளுள் ஒன்று, அவகாடோ. இதில் ஃபைபர் சத்துகள், பி 6 போன்ற நல்ல சத்துகள் உள்ளன. இதனால், உடலுறவின் ஆற்றலும் அதிகரிக்கும் .
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி சத்துகள் அதிகமாக காணப்படும். இது, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், மன அழுத்தத்தை குறைக்கும், உடல் உறவு கொள்வதற்கான ஆர்வத்தையும் தூண்டும். காதல் ஹார்மோன்களை தூண்டுவதற்கும் இந்த பழம் உதவும்.