முதுகெலும்பு வலுவாக இருக்க ‘இந்த’ உணவுகளை டயட்டில் சேர்க்கவும்

நேர்த்தியான உடல் வாகிற்கும் , கம்பீரமான தோற்றத்திற்கும் இன்றியமையாதது முதுகெலும்பு.  கணினியின் முன்பே அமர்ந்து பணிபுரிந்து வருபவர்கள், முதுகு வலி மற்றும் முதுகெலும்பு சார்ந்த  பிரச்சனைகளை எதிர்க்கொள்கின்றனர். 

1 /5

முதுகெலும்பை வலுப்படுத்த விரும்பினால், உடற்பயிற்சி செய்வதோடு, வாழ்க்கை முறையையும், உணவு பழக்க வழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதனால் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

2 /5

பச்சை இலைக் காய்கறிகள் அனைத்து உடல் மூட்டுகளுக்கான சிறந்த மருந்து என நம்பப்படுகிறது. இது நமது உடலின் முதுகெலும்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை மற்றும் முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் எலும்பை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

3 /5

கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் உள்ள மெலிந்த புரதம் முதுகெலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தக்கூடியது. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கபதோடு திசுக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

4 /5

ஆரஞ்சு நிற காய்கறிகளை சாப்பிடுவதாலும் முதுகுத்தண்டும் வலுவடைகிறது. பரங்கிக்காய்,  சக்கரை வள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றை அடங்கும்.

5 /5

உணவில் பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுப்பெறும். பாதாமில் கால்சியம் மற்றும் வைட்டமின்-ஈ நிறைந்துள்ளது. மற்ற கொட்டைகளை விட வதுமை பருப்பில் அதிக ஒமேகா-3கள் இருப்பதாக நம்பப்படுகிறது.