லியோ படத்துடன் இணைந்த சிவகார்த்திகேயனின் அயலான்!

நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் இருந்த  சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.

 

1 /5

2024 பொங்கல் அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள 'அயலான்' படம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வருகிறது.  

2 /5

அயலான் படத்தின் டீசர் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.  ​சென்னை சத்யம் திரையரங்கில் டீஸர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

3 /5

மேலும், அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள தளபதி விஜய்யின் 'லியோ' படத்தின் இடைவெளியில் அயலான் டீசர் திரையிடபட உள்ளது.   

4 /5

ரவிக்குமார் இயக்கிய அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.   

5 /5

கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு நிரவ் ஷா மற்றும் எடிட்டிங் ரூபன் செய்துள்ளார்.