வாழ்க்கை வாழ்வதற்கே! ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இந்த அறிகுறிகளை கவனியுங்கள்

Health Deficiency Alert:  ஊட்டச்சத்து குறைபாடுகள் லேசான அறிகுறிகளாகத் தொடங்கலாம், ஆனால் அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், நமது ஆரோக்கியம் சீர்கெட்டு, பலவீனமாகிவிடும்

ஊட்டச்சத்து குறைபாடு என்பது பலவகைப்படும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்காவிட்டால், பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஊட்டம் உடலில் குறைந்து போவதை நமக்கு உடல் அவ்வப்போது அறிகுறிகள் மூலம் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அது நமக்கு புரிவதில்லை. 

இந்தக் கட்டுரையில், ஊட்டச்சத்து குறைப்பாட்டின் வகைகள் மற்றும் அவற்றின் அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வோம். 

1 /10

ஊட்டச்சத்து குறைபாடுகள் லேசான அறிகுறிகளாகத் தொடங்கலாம், ஆனால் அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், நமது ஆரோக்கியம் சீர்கெட்டு, பலவீனமாகிவிடும். 

2 /10

கவனிக்கவேண்டிய அறிகுறிகள் நமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முக்கியம். அவற்றில் ஏதேனும் ஒன்றின் குறைபாடு கூட இயல்பான வாழ்க்கையை பாதிக்கும். வாழ்க்கை வாழ்வதற்கே என்னும்போது அதை மகிழ்ச்சியாக வாழ இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

3 /10

ஊட்டச்சத்து குறைபாடுகள் லேசான அறிகுறிகளாகத் தொடங்கலாம், ஆனால் அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், ஆரோக்கியம்  நம்மை அலட்சியப்படுத்திவிடும்

4 /10

இரும்புச்சத்து குறைபாடு உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்து இரும்புச்சத்து போதுமான அளவு இல்லாதபோது, அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் இந்த ஊட்டச்சத்து உடலில் போதுமான அளவு இல்லாதபோது, ​​இது பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.   இரும்புச்சத்து குறைபாட்டின் முக்கிய அறிகுறிகள்: பலவீனம், வெளிர் தோல், சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகும்

5 /10

வைட்டமின் பி12 குறைபாடு நமது உடலின் உயிரணுக்களில் உள்ள டிஎன்ஏ மற்றும் மரபணுப் பொருட்களை உருவாக்க வைட்டமின் பி12 இன்றியமையாத ஊட்டச்சத்தாக இருக்கிறது. உடலின் நரம்பு செல்கள் மற்றும் இரத்தத்தை ஆரோக்கியமாக வைக்கும் வைட்டமீன் பி12 ஊட்டச்சத்து குறைபாடு உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். வைட்டமின் பி12 குறைபாடு அறிகுறிகள் இவை: சோர்வு, பலவீனம், வெளிர் தோல், கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு 

6 /10

வைட்டமின் சி குறைபாடு வைட்டமின் சி உடலில் குறைந்தால், தசைகளில் வலி ஏற்படும். உடல் பலவீனம், மூட்டு வலி, சோர்வு ஆகியவற்றின் மூலம் வைட்டமின் சி குறைபாட்டை தெரிந்துக் கொள்ளலாம்.

7 /10

வைட்டமின் டி குறைபாடு வைட்டமின் டி மனச்சோர்வைத் தடுக்கும், உடலில் கால்சியத்தை உறிஞ்சி, எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால், தசைகளில் பலவீனம், எலும்பு வலி மற்றும் அடிக்கடி தொற்று நோய்கள் ஏற்படலாம்.  அத்துடன் உடலில் பல செயல்பாடுகளும் பாதிக்கும்.

8 /10

கால்சியம் குறைபாடு எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் எலும்பு அடர்த்திக்கும் கால்சியம் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.  கால்சியம் குறைபாடு அறிகுறிகள்: தசைப்பிடிப்பு, உடலில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, நகங்கள் உடைவது, மூட்டுவலி

9 /10

அயோடின் குறைபாடு அயோடின் குறைபாடு ஏற்பட்டால், உடல் எடை அதிகரிப்பு, சோர்வு, கழுத்து வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

10 /10

வைட்டமின் ஏ குறைபாடு மீண்டும் மீண்டும் வரும் நோய்த்தொற்றுகள், சரும வறட்சி, மாலை வேளையில், பார்வைத்திறன் குறைவது ஆகியவை வைட்டமின் ஏ குறைபாட்டின் முக்கிய அறிகுறிகளாகும்.