கபில்தேவ்வின் மோசமான சாதனை இப்போது ஸ்ரேயாஸ் அய்யர் வசம் வந்துள்ளது
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 59 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் அவர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால், 49 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். 50 ரன்னை பவுண்டரி மூலம் எடுக்க நினைத்தபோது கேட்சானார்.
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கபில்தேவ் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், அவர் நாட் அவுட்டாக பெவிலியன் சென்றார்.
நியூசிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிரான 49 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்க முடியாமல் போன 2வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனை ஸ்ரேயாஸ் வசம் வந்துள்ளது.
ஸ்ரேயாஸ் அய்யருடன் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார்.