Saturn Transit In Poorattathi Nakshatra: ஜோதிடத்தின் படி, வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி நீதியின் கடவுளான சனி தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று பார்ப்போம்.
Saturn Transit In Poorattathi Nakshatra: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் இவர் நட்சத்திரத்தை மாற்ற 400 நாட்கள் ஆகும். அதன்படி தற்போது சனி தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார்.
வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி சனி நட்சத்திர மாற்றம் நிகழும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் நன்மைகள் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: சனியின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். வருமானத்தில் அதிகரிப்பு காணலாம். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் இடமாற்றமும் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறலாம். பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களும் வெற்றி பெறலாம். பணியிடத்தில் லாபம் பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி மனம் அமைதியை தரும். இடமாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். வருமானத்தில் அதிகரிப்பு காணலாம். நண்பர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
கும்ப ராசிக்கு அதிபதி சனி. தற்போது சனி நட்சத்திர பெயர்ச்சி கும்ப ராசியினருக்கு மிகவும் சாதகமான பலனை தரும். நம்பிக்கை, மரியாதை அதிகரிக்கும். வரவிருக்கும் காலம் சிறப்பாக இருக்கும். நல்ல மற்றும் பெரிய பலன்களைப் பெறலாம்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.