சதயத்தில் சனி பகவான்! தீபாவளி வரை ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம் தான்!

சனிப்பெயர்ச்சி 2023 : சனி தேவன் நீதியின் கடவுள். கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர். சனி தேவன் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார். சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும் வளத்தையும் பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது.

சனியின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனிதேவர் மார்ச் 15 முதல் சதய நட்சத்திரத்தில் நுழைந்திருக்கும் சூழ்நிலையில், அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், சனியின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

1 /7

கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்கும் சனி தேவன் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார். சனிபகவானின் அருளால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வளமும் நிம்மதியும் காணப்படும். இந்நிலையில், சனிதேவர் மார்ச் 15 முதல் சதய நட்சத்திரத்தில் நுழைந்திருக்கும் சூழ்நிலையில், அக்டோபர் 17 வரை இந்த நட்சத்திரத்தில் இருக்கப் போகிறார். இதனால் சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இது இருக்கும்.

2 /7

தனுசு: சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைந்திருப்பது தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். இந்த நேரம் உங்களுக்கு பல விஷயங்களில் நன்மை தரும். நீண்ட காலமாக வாட்டிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வேலைக்கான தேடல் முடியும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கும் லாபத்தைக் கொடுக்கலாம்.

3 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 17ம் தேதி வரை சனி பகவான் பல சுப பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பணம் கிடைக்கும். மாணவர்களும் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள்.

4 /7

சிம்மம்: சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைந்திருப்பது அக்டோபர் வரை சிம்ம ராசிக்காரர்களின் தொழிலில் மகத்தான பலன்களைத் தரும். பெரிய வெற்றியையும் புகழையும் அடைய முடியும். விரும்பிய இடத்திற்கு மாறலாம். புதிய வேலைக்கான தேடல் முடியும். வருமானம் அதிகரிக்கும்.

5 /7

மேஷம்: அக்டோபர் வரையிலான காலம் இவர்களுக்கு தொழில் தொடங்க மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மறுபுறம், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பண வரவும் சாதகமாக இருக்கும்.

6 /7

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் சதய நட்சத்திரப் பிரவேசம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.