ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மட்டும் போதாது, எந்த அளவு சரியான விகிதத்தில் சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம் என்பது சாய் பல்லவியின் கருத்து.
காலை உணவு உண்பதற்கு முன்னதாக தனது நாளை காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது உலர் பழங்களுடன் சாய் பல்லவி தொடங்குகிறார்.
காலை உணவாக அவல் அல்லது பழங்களுடன் இட்லி, ஊத்தாப்பம் போன்றவற்றை சாப்பிடுகிறார், அவரது காலை உணவில் பழங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
காலை உணவுக்கும்-மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர் 1 கிளாஸ் அளவிலான பழச்சாறு அல்லது நட்ஸ் வகைகளை சாப்பிடுகிறார். வீட்டில் சமைத்த உணவுகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறார், சாம்பார் சாதம், ரொட்டி மற்றும் சாலட் சாப்பிடுகிறார்.
கிட்டத்தட்ட மதிய நேரத்தில் சாப்பிடும் உணவு வகைகளை போன்று தான் அவரது இரவு உணவும் இருக்கும் மற்றும் அவர் தினமும் தனது சரும பளபளப்பிற்காக இளநீரை குடிக்கிறார்.