5G Smartphones in Budget: 5G சேவை இந்தியாவில் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை இன்னும் முழுமையாகப் பெறத் தொடங்காததால் இப்போது அதைப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தைப் பெற நீங்கள் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி-ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவை உங்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும், அம்சங்களும் அசத்தலாக இருக்கும்.
இது வாடிக்கையாளர்கள் பட்ஜெட் வரம்பில் வாங்கக்கூடிய பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. மேலும் செயலியைப் பற்றி பேசினால், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி செயலி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இதை 18,999 ரூபாய்க்கு வாங்கலாம்.
ஓப்போவின் இந்த போன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.56-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சக்திவாய்ந்த வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இதில் MediaTek Dimensity 810 5G செயலி உள்ளது. ஸ்மார்ட்போனில் வலுவான 5,000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜர் உள்ளது. இதன் விலை ரூ.16,499 ஆகும்.
இது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.58 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் Exynos 1280 செயலியைப் பெறுகின்றனர். இதன் விலை 16,999 ரூபாயாகும்.
இந்த ஸ்மார்ட்போனில், வாடிக்கையாளர்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 செயலியுடன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்தைப் பெறுகிறார்கள். இதில் 6.67 இன்ச் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உள்ளது. கேமராவைப் பற்றி பேசுகையில், 64MP முதன்மை டிரிபிள் கேமரா அமைப்பு அதன் பின்புறத்தில் கிடைக்கிறது மற்றும் 16MP முன் கேமரா கிடைக்கிறது. இதன் விலை ரூ.16,999 ஆகும்.