Vladimir Putin: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் அவரது ரகசிய மகள்களும் சொத்துக்களும்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகத்தையே எதிர்த்து, உக்ரைன் மீது தாக்குதல்களைத் தொடங்கிவிட்டார். ஆனால், தனது குடும்பத்தினர் பற்றிய தகவல்களை மட்டும் உலகிலிருந்து ரகசியமாக வைத்திருக்கிறார். இது புடினின் ரகசிய குடும்பம் மற்றும் மகள்களின் புகைப்படங்கள்...

1 /10

விளாடிமிர் புடின் 1952 இல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தார். புடின் 1975 இல் ரஷ்ய இரகசிய நிறுவனமான கேஜிபியில் சேர்ந்தார், பின்னர் நாட்டின் அதிபராக உயர்ந்த புடினின் தனிப்பட்ட வாழ்க்கை இது. அவரது குடும்பத்தை (Vladimir Putin Secret Family and Daughters) அவர் உலகிலிருந்து ரகசியமாக வைத்துள்ளார்.   தி சன் அறிக்கையின்படி, விளாடிமிர் புடின் தனது குடும்பத்தைப் பற்றி பகிரங்கமாக தெரிவித்ததில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மரியா மற்றும் கத்ரீனா என இரண்டு மகள்கள் இருப்பதாக கூறப்பட்டாலும்.  அவரது மகள்களைப் பற்றி வெளியே பேசுவதில்லை.  (Photo Source - The Sun)

2 /10

ஸ்வெட்லானா கிரிவோனோகிக் மற்றும் விளாடிமிர் புடினுக்கும் 18 வயது மகள் உள்ளார், இது கடந்த ஆண்டுதான் தெரியவந்தது. எலிசவெட்டா விளாடிமிரோவ்னா அல்லது லூயிசா பிறந்த பிறகு புடின் மற்றும் ஸ்வெட்லானா பிரிந்தனர்.  (Photo Source - The Sun)

3 /10

விளாடிமிர் புடின் 1983 இல் லியுட்மிலா ஷ்க்ரெப்னேவாவை மணந்தார். அவர் மூலம் புடினுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.2013-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். (Photo Source - The Sun)

4 /10

45 வயதான ஸ்வெட்லானா கிரிவோனோகிக் 90 களில் விளாடிமிர் புடினைச் சந்தித்தபோது ஒரு துப்புரவுத் தொழிலாளியாக இருந்தார். (Photo Source - The Sun)

5 /10

அவர் மகள் லூயிசாவுக்கு நிறைய பணம் செலவழிக்கிறார் விளாடிமிர் புடின் 18 வயதான லூயிசாவுக்கு நிறைய பணம் செலவழிக்கிறார். லூயிசா அடிக்கடி சமூக ஊடகங்களில் தனது ஆடம்பர வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறார்.   (Photo Source - The Sun)

6 /10

தி சன் செய்தியின்படி, விளாடிமிர் புடினின் சொத்து மதிப்பு 160 பில்லியன் பவுண்டுகள் அதாவது சுமார் 16555 பில்லியன் ரூபாய்கள். அவருக்கு கார்கள், படகுகள் மற்றும் ரகசிய அரண்மனைகள் உள்ளன. இது தவிர, தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. (Photo Source - The Sun)

7 /10

விளாடிமிர் புடினும் 37 வயதான முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவாவுடன் உறவில் இருக்கிறார், அவருடன் டேட்டிங் செய்கிறார். அலினா இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள், 14 உலக சாம்பியன்ஷிப் மற்றும் 25 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்ற விளையாட்டு வீராங்கனை ஆவார். விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் அரசியலில் சேர்ந்தார் மற்றும் புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சியின் எம்.பியாக உள்ளார்.   (Photo Source - The Sun)

8 /10

2020 ஆம் ஆண்டில், விளாடிமிர் புடின் ஒரு பெண் துப்புரவு தொழிலாளியுடன் தொடர்பு வைத்திருந்தார்,  துப்புரவு தொழிலாளியாக இருந்த புடினின் மனைவி இப்போது கோடிகளுக்கு சொந்தக்காரர். ஸ்வெட்லானா கிரிவோனோகிக் என்ற பெண்ணுடன் புடினின் உறவு 90 களில் தொடங்கியது, ஆனால் இருவரும் 2003 இல் பிரிந்தனர்.  (Photo Source - The Sun)

9 /10

விளாடிமிர் புட்டினின் மகள் மரியா, ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளர். அவர், தனது டச்சு கணவர் ஜார்ஜ் ஃபாசனுடன் மாஸ்கோவில் வசிக்கிறார். அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.  (Photo Source - The Sun)

10 /10

கத்ரீனா டிகோனோவா ஒரு அக்ரோபேட் நடனக் கலைஞர். மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் உள்ளார். அவர் 2017 இல் ரஷ்ய கோடீஸ்வரரான கைலி ஷாமலோவை மணந்தார், ஆனால் இந்த ஜோடி இந்த ஆண்டு விவாகரத்து செய்தது.  (Photo Source - The Sun)