Bloco அதிகாரப்பூர்வமற்ற நடனவிழா! களைகட்டாத ரியோ டி ஜெனிரோ நடனத் திருவிழா

ரியோ டி ஜெனிரோ திருவிழாவைச் சார்ந்து இருக்கும் ஒரு நகரம். அங்கு பிரபலமான ரியோ கார்னிவெல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. காணாமல் போன ரியோ கார்னிவல் அணிவகுப்புகளை ஈடுசெய்ய ஆயிரக்கணக்கானோர், அதிகாரபூர்வமற்ற நடன விழாவில் கலந்து கொண்டனர்.

ரியோ டி ஜெனிரோ திருவிழாவைச் சார்ந்து இருக்கும் ஒரு நகரம். அங்கு பிரபலமான ரியோ கார்னிவெல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. காணாமல் போன ரியோ கார்னிவல் அணிவகுப்புகளை ஈடுசெய்ய ஆயிரக்கணக்கானோர், அதிகாரபூர்வமற்ற நடன விழாவில் கலந்து கொண்டனர்.

ரியோ டி ஜெனிரோவின் நகர மையத்தில் ப்ளோகோ எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற தெரு விருந்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். களையிழந்தாலும், பாரம்பரியத்தை கைவிட மனமில்லாமல் நடனக் கலைஞர்கள் கூடினார்கள்.

 

1 /5

பிப்ரவரி 27, 2022 அன்று ரியோ டி ஜெனிரோவின் நகர மையத்தில் ப்ளோகோ எனப்படும் அதிகாரப்பூர்வமற்ற தெரு விருந்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். பொது இடங்களில் கார்னிவல் தெரு பார்ட்டிகள் தடை செய்யப்பட்ட பின்னரும் கூட இது நடந்தது. உலகப் புகழ்பெற்ற ரியோ கார்னிவல் தொற்றுநோய் காரணமாக ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. (Photograph:AFP)

2 /5

ரியோ டி ஜெனிரோவில் வழக்கமாக கூடும் அனைத்து தெரு நடனங்களுக்கும் தடை விதிக்கபட்டதால் அதிகாரப்பூர்வமற்ற திருவிழாவைத் தொடங்கினர். படங்களில், தெருக்களில் மக்கள் கூட்டம் நடனமாடுவதைக் காணலாம். (Photograph:AFP)

3 /5

Imperatriz Leopoldinense Samba பள்ளியின் உறுப்பினரை "கார்னிவல் 2022 " நிகழ்வில் கலந்துக் கொண்டார். சம்பா நடனப் பள்ளிகளின் அணிவகுப்புகளின் கோலகல கொண்டாட்டமாக இருக்கும் திருவிழாவை கொரோனா பாதிப்பு முடக்கிவிட்டது. (Photograph:AFP)

4 /5

உலகளவில் பிரபலமான தெரு நடனம் இல்லாததது வருத்தமளிப்பதாக  DJ, Dani Souto கூறுகிறார்.    (Photograph:AFP)

5 /5

இசைக்கலைஞர்கள் தங்கள் இசைக்கருவிகளை வாசிப்பதைக் காண முடிந்தது. உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, நிகழ்ச்சி அமைப்பாளரும் DJயுமான Grégoire Putteman, 1,500 பேரை ஒன்று திரட்டினார். பங்கேற்பாளர்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்கப்பட்டது.