Rinku Singh : துலீப் டிராபியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் குறித்து ரிங்கு சிங் முதன்முறையாக பேசியுள்ளார்.
Rinku Singh : இந்திய அணியின் இளம் வீரான ரிங்கு சிங் தனக்கு துலீப் டிராபியில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தை முதன்முறையாக ஓபனாக பேசியுள்ளார்.
ரிங்கு சிங் துலீப் டிராபிக்கான தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் டெஸ்ட் அணிக்கான பரிசீலனையில் இல்லை என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இது குறித்து அவரே இப்போது ஓபனாக பேசியுள்ளார்.
துலீப் டிராபி தொடர்களில் ஆட வேண்டும் என விரும்பினேன். ஆனால், 2023 ஆம் ஆண்டைப் போல் இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக இருக்கவில்லை. அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் நான் மிகவும் சிறப்பாக விளையாடினேன். அதனால் எனக்கு இந்திய டி20 அணியிலும் இடம் கிடைத்தது.
ஆனால் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளிலும் என எதிர்பார்த்தளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. இந்திய அணிக்காக விளையாடிய போட்டிகளிலும் நான் சொதப்பினேன்.
ரஞ்சி போட்டிகளிலும் மிக குறைவாகவே ஆடினேன். உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் மொத்தம் 3 போட்டிகள் மட்டுமே ஆடியிருக்கிறேன். இந்த காரணங்களால் எனக்கு துலீப் டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியை நான் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். சிறப்பாக ஆடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காக என்னுடைய கிரிக்கெட்டை இப்போதுபோல் சிறப்பாக ஆடுவேன். அதனால் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார் ரிங்கு சிங்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். ஆனால் கம்பீர் வருகைக்குப் பிறகு ரிங்கு சிங் வாய்ப்பு என்பது மிகவும் குறைந்துள்ளது. அவரை அணியில் விளையாட வைப்பதற்கான பரிசீலனைகூட கம்பீர் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இருப்பினும் ரிங்கு சிங் அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார். இதற்கான பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்திய அணிக்கான வாய்ப்பு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்