சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்

2009 ஆம் ஆண்டு ச்சினை சதமடிக்க விடாமல் செய்தது குறித்து பலமுறை வருந்தியிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 

2009 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்களுடன் சச்சின் களத்தில் இருந்தபோது, வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டிரைக்கில் இருந்த தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 

1 /6

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தாலும், அந்த அணியில் மிகச் சிறந்த பினிஷராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் தினேஷ் கார்த்திக். இதனால், அவரை ஆர்சிபி ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு போட்டி குறித்து அண்மையில் மனம் திறந்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.  

2 /6

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 96 ரன்கள் எடுத்து எதிர்முனை கிரீஸில் நின்றிருந்தார். அப்போது இந்திய அணி வெற்றிபெற 47 பந்துகளில் வெறும் 2 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஆனால், மலிங்கா பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக், சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.   

3 /6

இதனால், சச்சின் 46வது சதமடிக்கும் வாய்ப்பு பறிபோனது. இதனால், தினேஷ் கார்த்திக்கை சச்சின் ரசிகர்கள் பலரும் திட்டித் தீர்த்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் தினேஷ் கார்த்திக், 96 ரன்களில் இருந்த சச்சினை சதமடிக்க விடாமல் தடுத்தது மோசமான ஒரு தருணம் என நினைவு கூர்ந்துள்ளார்.  

4 /6

சச்சின் டெண்டுல்கரின் 51ஆவது பிறந்தநாளை ஒட்டி, அவருக்கு ஆர்சிபி அணி வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன், சச்சின் உடனான மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூர்ந்துள்ளனர்.   

5 /6

ஆர்சிபி அணியின் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், சச்சின் டெண்டுல்கரை முதன்முதலில் சந்தித்ததுதான் மிகவும் மகிழ்ச்சியான தருணம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.  

6 /6

அதே நேரத்தில், 96 ரன்களுடன் இருந்த சச்சினை சதம் அடிக்க விடாமல் தடுத்த சம்பவம் ஒரு மோசமான தருணம் என்றும், அதற்காக பலமுறை வருத்தப்பட்டதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.