சிறுநீரக கல் முதல் மூலநோய் வரை: அனைத்துக்கும் தீர்வாகும் முள்ளங்கி இலை

Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும். 

மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த இலைகள் சருமத்திற்கும் பொலிவைத் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல வித நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள முள்ளங்கி இலைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளாலாம். 

 

1 /5

சிறுநீரக கற்களை நீக்குவதில் முள்ளங்கி இலைகள் மிகவும் நன்மை பயக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவை கற்களை துண்டுகளாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். 

2 /5

பருக்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முள்ளங்கி இலையில் வைட்டமின்-ஏ உள்ளது. இது பருக்கள் பிரச்சனையை நீக்கும். எனினும், கர்ப்பிணிப் பெண்கள், முள்ளங்கி இலைகளை உட்கொள்ளும் முன்பாக மருத்துவரின் அறிவுரையை பெற வேண்டும்.

3 /5

முள்ளங்கி இலைகளில் நல்ல அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பருக்கள், புண்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் இது பாதுகாக்கிறது.  

4 /5

பைல்ஸ் பிரச்சனையால் சிரமப்படுபவர்களுக்கு முள்ளங்கி இலைகள் மிகவும் நன்மை பயக்கும். முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன. இது தவிர, இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி பைல்ஸ் பிரச்சனையை நீக்குகிறது.  

5 /5

ஹீமோகுளோபின் குறைவால் சிரமப்படுபவர்கள், முள்ளங்கி இலையை உட்கொள்ளலாம். இவை ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். முள்ளங்கி இலைகளில் நல்ல அளவு இரும்புச்சத்து உள்ளது. இது இரத்தத்தை உருவாக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்கள் வாரம் ஒருமுறை முள்ளங்கி இலைகளை உட்கொள்ள வேண்டும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)