ரயில் பயணங்கள் என்றும் மனதிற்கு இதமானவை. அதிலும் இயற்கையோடு இணைந்து மலை ரயிலில் பயணிக்கும் சுகம் அனுபவித்தவர்களுக்கு புரியும். மீண்டும் துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலுடன் இணைந்து பயணிக்கலாம்… அழகான ரயில் பயணத்தின் படங்கள்…
புதுடெல்லி: மீண்டும் நீலகிரி மலை ரயில்வே சேவையைத் தொடங்கியுள்ளது இந்திய ரயில்வே. இந்த ரயில் பாதை எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது. இந்த ரயில் பயணத்தின் சில படங்களை ரயில்வே வெளியிட்டுள்ளது…
Also Read | சரித்திரத்தின் பொன்னேடுகளில் ஜனவரி 2ஆம் நாள் பதிவு செய்திருக்கும் முக்கிய நிகழ்வுகள்
டிசம்பர் 31 முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்கியது
ஊட்டி மலை ரயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் (UNESCO's World Heritage) சேர்க்கப்பட்டுள்ளது
ரம்மியமான இயற்கை சூழலில் பயணிப்பது அற்புதமான அனுபவம்
மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கும் இந்த ரயில், குன்னூர் ரயில் நிலையம் வரை பயணிக்கும். பிறகு அங்கிருந்து ஊட்டி வரை வேறு ரயிலில் செல்ல வேண்டும்
ஊட்டி மலை ரயில் பாதை 46 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒருமுறை இந்த 46 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டால் அது உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பொக்கிஷப் பயணமாக என்றென்றும் மனதில் நிற்கும்
மலைகளும், மலை சார்ந்த இடங்களும்
விஜயநகர பேரரசு, ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் என பல மன்னர்களின் விருப்பத்திற்கு உரியது மலைகளின் அரசி நீலகிரி