pregnancy tips : கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் இருந்தால் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
pregnancy tips : பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமான கர்ப்ப காலத்தில் உடல் ரீதியாகும், மன ரீதியாகவும் பல கிளர்ச்சிகளை எதிகொள்வார்கள். இந்த நேரத்தில் உடலுறவு கொள்வது அவர்களுக்கு நல்லதா? என்பதை நிபுணர்கள் மூலம் அறிந்து கொள்வது அவசியம்.
கர்ப்ப காலம் என்பது பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலமாகும். இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பல்வேறு கிளர்ச்சிகளை சந்திக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா இல்லையா என்ற கேள்வி பல தம்பதிகளின் மனதில் எழுகிறது. இந்த விஷயத்தில் பல நம்பிக்கைகள் உள்ளன நிலையில், இது குறித்து பெண்கள் மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. உங்கள் கர்ப்பத்தில் சிக்கல்கள் இல்லாத வரையில், கணவருடன் பெண்கள் உடல் உறவுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் அந்த உறவுகளை மறுக்கலாம்.
நஞ்சுக்கொடி கருப்பையின் வாய்க்கு அருகில் அமைந்திருந்தால், உடலுறவால் இரத்தப்போக்கு ஏற்படலாம். உங்களுக்கு முன்கூட்டிய பிரசவம் ஏற்படும் அபாயம் இருந்தால், உங்கள் மருத்துவர் உங்களை உடல் உறவில் இருந்து தடுக்கலாம். நீங்கள் கருச்சிதைவு ஆபத்தில் இருந்தால், உடலுறவு கொள்ளக்கூடாது.
மகப்பேறு மருத்துவர் டாக்டர் சம்தா குப்தா பேசும்போது, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கர்ப்பம் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும் வரை, பொதுவாக உடலுறவு கொள்வது பாதுகாப்பானது. கர்ப்பம் இயல்பானதாக இருந்தால், ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை என்றால், நீங்கள் உடல் ரீதியான உறவுகளை வைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த காலகட்டத்தில் உடல் உறவில் ஈடுபடும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் சம்தா குப்தா தெரிவித்துள்ளார்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் சற்று அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் உடல் உறவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இரண்டாவது மூன்று மாதங்கள் (மூன்றாவது முதல் ஆறாவது மாதம்) கர்ப்பத்தின் பாதுகாப்பான காலமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில், பெண்ணின் உடல் கர்ப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும். இந்த நேரத்தில் உடல் உறவுகளை வைத்திருப்பது பொதுவாக பாதுகாப்பானது.
பல பெண்கள் இந்த காலகட்டத்தில் உடல் உறவு வைத்துக் கொள்கிறார்கள், ஏனெனில் இந்த நேரத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்போது உடல் உறவு வைத்துக்கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருக்கும்.
கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில், வயிற்றின் அளவு அதிகரிக்கிறது, இது உடல் உறவுகளில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், மருத்துவர்கள் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிப்பார்கள்.
மிக முக்கியமாக, உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகவும். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கர்ப்பத்திற்கு, நீங்களும் உங்கள் குழந்தையும் பாதுகாப்பாக இருக்க, உங்கள் உடல் நிலை மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பது முக்கியம். எதுவாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதே நல்லது.