எந்தெந்த கடவுளுக்கு என்னென்ன மலர் மாலை போட வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்

விநாயகர், விஷ்ணு, சரஸ்வதி உள்ளிட்ட கடவுள்களுக்கு இஷ்ட மலர் மாலைகள் என்ன என்பதைதெரிந்து கொள்ளுங்கள்

கோயிலுக்கு செல்லும்போது, எந்த கடவுளுக்கு என்ன மலர் மாலை வாங்கினால் சிறப்பு என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் அதற்கேற்ற நற் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 

1 /8

நம் வழிபாட்டு முறையில் பூக்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கு இஷ்ட மலர்களில் மாலை கோர்த்து வழிபாடு நடத்துவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் எந்த  கடவுளுக்கு எந்த மலர் இஷ்டம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த மலர் மாலையை கோர்த்து போடும்போது உங்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும். 

2 /8

விஷ்ணுவுக்கு தாமரை : விஷ்ணு பெரும்பாலும் கையில் தாமரையுடன் காணப்படுவார். அதில் இருந்தே விஷ்ணுவுக்கு இஷ்ட மலர் தாமரை என்பதை தெரிந்து கொள்ளலாம். தாமரை தெய்வீகம், தூய்மை மற்றும் அறிவொளி ஆகியவற்றுடன் தொடர்புடையது. எப்படி இருண்ட நீரில் தாமரை மலர்கிறதோ, அதே போல மனிதர்களும் எந்த சூழ்நிலையிலும் செழித்து செழிக்க முடியும்.

3 /8

விநாயகப் பெருமானுக்கு சாமந்திப்பூ : சாமந்தி அனைத்து கடவுள்களுக்கும், குறிப்பாக விநாயகப் பெருமானுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. பூவின் மஞ்சள்-ஆரஞ்சு நிறமும், அழகான இதழ்களும், அழகான வட்டமாக பூக்கும் விதமும் விநாயகப் பெருமானை மகிழ்விப்பதாகக் கூறப்படுகிறது. சாமந்திப் பூ நேர்மறைஆற்றலின் சின்னமாகும், மேலும் அவற்றை விநாயகப் பெருமானுக்கு சமர்ப்பிக்கும்போது வெற்றி, செழிப்பு கிடைக்கும். எதிர்மறை ஆற்றல்கள் விலகி விநாயகரின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கும். 

4 /8

சிவபெருமானுக்கு கரு ஊமத்தை : சிவ பெருமானுக்கு அதிகமாக அல்லி, நீல தாமரை, நாகலிங்க பூ உள்ளிட்டவை படைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த மலர் கரு ஊமத்தை. சிவபெருமான் 'ஹாலாஹல்' என்ற விஷத்தை உட்கொண்டபோது சிவபெருமானின் வியர்வையிலிருந்து கரு ஊமத்தை (ஆங்கிலத்தில் Datura) மலர்கள் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் வழிபாடு நடத்தினால் சிவபெருமானின் அருளை சீக்கிரம் பெறலாம்.  

5 /8

சரஸ்வதிக்கு சம்பா : ஞானம், நேர்த்தி, தூய்மை ஆகியவற்றின் உருவகமான சரஸ்வதி, அறிவு, கலைகள், படைப்பாற்றல் மற்றும் பலவற்றின் தெய்வம். அதனால் சரஸ்வதிக்கு தன்னைப் போலவே தூய்மையான மற்றும் பக்தியுள்ள சம்பா பூ மீது விருப்பம். இது அழகு, எளிமை மற்றும் தெளிவின் சின்னம் ஆகும். சரஸ்வதி பூஜையின் போது சம்பா பூக்களை வழங்குவது பக்தர்களின் செறிவு, கலை திறன்கள் மற்றும் ஞானத்தை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.

6 /8

காளிக்கு செம்பருத்தி : சிவப்பு செம்பருத்தி மலர் மா காளிக்கு புனிதமானது. அனைத்து கெட்ட மற்றும் தீமைகளை நீக்கி பிரபஞ்சத்தில் சமநிலையை பராமரிக்கும் காளி தேவி எப்போதும் உக்கிரமாக இருப்பார் என்பதால் செம்பருத்தி மலர்கள் அவரை சாந்தப்படுத்துமாம். அந்த மலர் வாசனை மூலம் சாந்தமாகும் தேவி காளி, அப்போது என்ன வரம் கேட்டாலும் கொடுப்பாராம். 

7 /8

ராமருக்கு மல்லிகை : விஷ்ணுவின் அவதாரமான ராமர், இஷ்ட மலர் என்றால் மல்லிகைப் பூ. ஏனென்றால் மல்லிகை மலர் தூய்மை, எளிமை மற்றும் கருணை ஆகியவற்றின் அடையாளம். இவை ராமர் தனது வாழ்நாள் முழுவதும் காட்டிய மூன்று குணங்கள். இந்த பூவை கொண்டு வழிபாடு நடத்தினால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

8 /8

கிருஷ்ணருக்கு ரோஜா ; பகவான் கிருஷ்ணர் என்றென்றும் அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்பும் கடவுள். லீலைகளின் மன்னனான கிருஷ்ணருக்கு ரோஜா பூ என்றால் கொள்ளை பிரியம். இந்த பூவை வைத்து வழிபட்டால் நினைத்த காரியங்களுக்கான வரத்தை கிருஷ்ணர் கொடுப்பாராம்.