Public Provident Fund: நமக்கு பல சமயங்களில் பணத்திற்கான தேவை ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட நேரங்களில், அலுவலகங்கள், வங்கிகள், அல்லது பிற இடங்களிலிருந்து நாம் கடன் பெறுகிறோம்.
நீங்கள் பிபிஎஃப் முதலீட்டளாரக இருந்தால், இங்கும் உங்களால் கடன் பெற முடியும். மேலும் இங்கு தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன்களை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறலாம். இதற்கான செயல்முறையை பற்றி இங்கே காணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடு செய்யும் நபர்களுக்கு முதலீட்டுத் தொகையில் வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகும் வருமானம் கிடைக்கும். இது தவுர PPFல் கடன் (Loan) வசதியும் உள்ளது.
PPF இல் கிடைக்கும் கடன் மிகவும் மலிவானதாக இருக்கின்றது. தனிநபர் கடனை விட குறைந்த விகிதத்தில் இதில் கடன் கிடைக்கும். அவசரகாலத்தில் கடன் தேவைப்பட்டால், மக்கள் PPF -இல் கடன் பெறலாம். இதற்கான சில விதிகளும் உள்ளன.
PPF -இல் கடன் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. இதைப் பெற எதையும் அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த கடன் முதலீட்டாளரின் பிபிஎஃப் கணக்கில் (PPF Account) டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த கடன் 8.1 சதவீதம் வட்டியில் வழங்கப்படுகிறது. பிபிஎஃப் கணக்கில் உள்ள தொகைக்கு கிடைக்கும் வட்டி 7.1 சதவிகிதமாகும். அந்த வகையில் பார்த்தால் வெறும் 1% -இல் பிபிஎஃப் கடன் கிடைக்கிறது. தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 10.50 - 17 அல்லது 18 சதவீதம் வரை இருக்கும்.
பிபிஎஃப் கணக்கு (PPF Account) தொடங்கி 5 வருடங்கள் ஆனவுடன் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பிபிஎஃப் கணக்கிலிருந்து 25 சதவிகிதம் வரை மட்டுமே கடனாகப் பெற முடியும்.
பிபிஎஃப் கணக்கு (PPF Account) தொடங்கி 5 வருடங்கள் ஆனவுடன் நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். பிபிஎஃப் கணக்கிலிருந்து 25 சதவிகிதம் வரை மட்டுமே கடனாகப் பெற முடியும்.
முதலில் உங்கள் பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டுள்ள வங்கியின் கிளைக்குச் சென்று கடனுக்கான படிவத்தை நிரப்ப வேண்டும். அந்த படிவத்தில் தேவையான கடன் தொகையுடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை எழுத வேண்டும். இதற்கு முன்னர் நீங்கள் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், அந்த படிவத்தில் அந்த தகவலையும் கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக, கடன் விண்ணப்பத்துடன் பிபிஎஃப் பாஸ்புக்கையும் (PPF Passbook) சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பித்து ஒரு வாரத்தில் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.