Tamil Nadu Temples: நம்பிக்கையின் தூண்களாய் நின்று பக்தர்களை காக்கும் தலங்கள்

Top 10 Temples of Tamil Nadu: தமிழ் நாடு கோவில்களின் மாநிலமாகும். இங்கு ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒரு கோவிலை காண முடியும். ஆன்மீகம் தழைத்தோங்கும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் சிறப்பு வரலாற்று முக்கியத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சில முக்கிய கோவில்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /10

தமிழகத்தில் முழுமுதற் கடவுள் பிள்ளையாரின் முக்கிய கோவிலாக விளங்கும் கோவில் பிள்ளையார்பட்டி ஆகும். பிள்ளையார்பட்டிக்கு எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், மருதங்குடி, திருவீங்கைகுடி, திருவீங்கைச்வரம், இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. இங்குள்ள பிள்ளையாரை வணங்கினால் எந்த ஆபத்தும் நம்மை அண்டாது.

2 /10

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தமிழ் கடவுள் முருகனின் முக்கிய கோயிலாகும். இங்கு உள்ள சிற்பம் மற்ற சிற்பங்களைப் போல கல்லால் செய்யப்பட்டதன்று. ஒன்பது வகையான மருத்துவப் பொருட்களைச் (நவபாசாணம்) சேர்த்து இந்த முருகப்பெருமானின் திருமேனி போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது.

3 /10

தமிழ்நாட்டில் மிக அதிக பக்தர்கள் வருகைதரும்  கோயில்களில் திருவண்ணாமலையும் ஒன்று. பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

4 /10

பொதுவாக கிழக்கு நோக்கி அருள் புரியும் சிவன் இக்கோவிலில் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் 5 கோபுரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. எந்த விதமான பிணியையும் தீர்க்கும் வைத்தியராக இந்த கோவிலில் சிவபெருமான் பக்தர்களை காத்தருள்கிறார். 

5 /10

108 வைணவ திருத்தலங்களில் திருவரங்கம் முதன்மையான கோவிலாகும். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. கோவிலில் மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, வேறு பல சன்னதிகளும் சுமார் 53 உப சன்னதிகளும் உள்ளன.

6 /10

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒரு முக்கிய திருத்தலமாகும். பன்னிரு ஆழ்வார்களில் இரு ஆழ்வார்கள் அவதரித்த தலமாக இது உள்ளது. இந்த கோவிலின் இராஜகோபுரம் தமிழ்நாடு அரசின் சின்னமாக அமைந்துள்ளது.

7 /10

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயமபுரம் மாரியம்மன் திருக்கோவில், தீமைகளை அழித்து, நன்மைகளை அருளி, பிணிகளை தீர்த்து பக்தர்களை காக்கும் அன்னை மாரியம்மன் குடிகொண்டுள்ள கோவிலாகும். இந்த கோவில், காவிரி ஆற்றின் வடகரையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 

8 /10

அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், மிக பிரசித்திபெற்ற கோவிலாகும். இதை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த கோவிலில் தங்க விமானத்தின் கீழ் அமர்ந்து அம்மன் அருள் பாலிக்கிறார். 

9 /10

கல்விக்கடவுளான சரஸ்வதி அருள் பாலிக்கும் கூத்தனூர் சரஸ்வதி கோவில் கண்டிப்பாக மாணவர்கள் அனைவரும் சென்று வழிபட வேண்டிய கோவிலாகும். ஞானம் பெருகவும், அறியாமை விலகவும், பக்குவம் மேம்படவும் அன்னை சரஸ்வதி அருள் பாலிக்கிறார். 

10 /10

நாமக்கல் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரின் உயரமானது 18 அடியாகும். தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இது. இந்த கோவிலுக்கு கோபுரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.