சிறையில் விசாரணை அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அரசியல் ஆர்வலர்

இந்த அரசியல் ஆர்வலர் சிறையில் போடப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறையில் விசாரணையாளர்களை முத்தமிட கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார்   அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் (Lozain-al-Hathlaul). அவர் தான் எதிர்கொண்ட பயங்கரமான கொடுமைகளை விவரிக்கிறார்...

1001 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் சவூதி அரேபிய அரசியல் ஆர்வலர் லூஜெய்ன் அல் ஹத்லூல் (Lozain-al-Hathlaul). சிறையில் இருந்த காலத்தில் விசாரணை நடத்தும் அதிகாரிகளை முத்தமிட கட்டாயப்படுத்தப்பட்டார், பலருடன் உடல் ரீதியான உறவு கொள்ளவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்.
லூஜெய்ன் அல் ஹத்லூல் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன தெரியுமா?  

Also Read | Fake Currency: போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு, அடையாளம் காண்பது எப்படி?  

1 /5

லூஜெய்ன் அல்-ஹத்லூல் நேற்று தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார், சிறையிலிருந்து வெளியே வந்தபின் தான் எதிர்கொண்ட கொடுமைகளை விவரித்தார். 3 ஆண்டுகளாக சிறையில் இருந்த லூஜெய்ன் அல் ஹத்லூல், தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலரும் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர்.  (Pic courtesy: Reuters)

2 /5

முன்னதாக, சவுதி அரேபியாவின் சிறையில் லூஜெய்ன் அல் ஹத்லூல் பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என மனித உரிமை வழக்கறிஞர் பரோனஸ் ஹெலினா கென்னடி ஒரு கடிதம் எழுதினார்,. விசாரணையின் போது, பல முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.  (Pic courtesy: Reuters)

3 /5

பரோனஸ் ஹெலினா கென்னடியின் குற்றச்சாட்டுகளின்படி, லூஜெய்ன் அல் ஹத்லூல் விசாரணையின் போது ஆபாசப் படங்களை பார்க்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் அவர் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. மின்சார அதிர்ச்சியும் பல முறை கொடுக்கப்பட்டது.

4 /5

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு உரிமை வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுப்பதில் அளிப்பதில் லூஜெய்ன் அல் ஹத்லூல் முக்கிய பங்கு வகித்தார். 2018 இல் கைது செய்யப்பட்ட லூஜெய்னுக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  

5 /5

சவுதி அரேபியாவின் ஆட்சியை லூஜெய்ன் அல் ஹத்லூல் பலமுறை விமர்சித்துள்ளார். ஆண் உறவினர் இல்லாமல் பெண்கள் ஏன் சவுதி அரேபியாவில் தனியாக பயணம் செய்யக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். லூஜைன் அல்-ஹத்லால் 2014 இல் சவுதி அரேபியாவின் பெண்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தார். பின்னர் அவர் காரை ஓட்டி எடுத்த வீடியோவை நேரடியாக ஒளிபரப்பினார்.  (Photo courtesy: Twitter)