Health News: உடல்நலனுக்கு உற்ற நண்பன் கேழ்வரகே, மற்றதெல்லாம் அதன் பிறகே!!

இந்நாட்களில் எடை இழப்புக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன.

குறிப்பாக இந்நாட்களில் கேழ்வரகு அதாவது ராகி அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. ராகி இந்தியாவின் பல இடங்களில் நாச்னி என்றும் அழைக்கப்படுகிறது.

1 /5

கேழ்வரகின் முக்கிய அம்சம் என்னவென்றால், ராகியில் கொழுப்பு (Fat) மற்றும் சோடியம் சிறிதளவும் இல்லை.  இது தவிர, இதில், நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, எடை இழப்புக்கு இது சிறந்ததாக கருதப்படுகிறது. இது மட்டுமல்லாமல், ராகியில் இன்னும் பல நன்மைகள் உள்ளன.

2 /5

ராகியில் கோதுமை மாவு அல்லது அரிசி மாவை விட பாலிபினால்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, மற்றும், இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. எனவே, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகியை காலை உணவிலோ (Healthy Food) அல்லது பகலில் மதிய உணவிலோ சேர்ப்பது நன்மை பயக்கும்.

3 /5

ராகியில் இரும்புச் சத்து (Iron) அதிகமாக உள்ளது. ஆகையால், யாருக்காவது, இரத்த சோகை இருந்தாலோ அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு இருந்தாலோ, அவர்களுக்கு ராகி நல்ல பயன் அளிக்கும். 

4 /5

கேழ்வரகில் அமினோ அமிலம் மற்றும் உடலுக்குத் தேவையான புரதங்கள் நிறைந்துள்ளன. சைவ உணவை மட்டும் உட்கொள்ளும் மக்களின் உணவில் பெரும்பாலும் புரத மூலங்கள் குறைவாக இருக்கின்றன. புரதத்தின் குறைபாட்டை பூர்த்தி செய்ய அவர்கள் ராகியை உட்கொள்ளலாம்.

5 /5

ராகியில் ஏராளமான ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. அவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. கவலை, மனச்சோர்வு அல்லது தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், ராகியை உட்கொண்டால் நல்ல மாற்றத்தை உணரலாம். ராகியால் அந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.