Pay Commission முக்கிய செய்தி: இந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் பம்பர் ஊதிய உயர்வு

Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்கள் ஊதியக் குழு நன்மைகள் எப்போது தங்கள் ஊதியத்தில் வந்து சேரும் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி உட்பட பல வகையில் ஊழியர்களின் ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், சில மாநிலங்களில் உள்ள அரசு ஊழியர்கள் 2021 ஏப்ரல் 30 முதல் தங்களது சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பைக் காண்பாகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் 3.25 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் உடனடி பயன் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.  அதேபோல் இமாச்சல பிரதேசத்தின் சுமார் இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களும் நன்மையைப் பெறுவார்கள். இரு மாநிலங்களின் அரசாங்கங்களும் ஊழியர்களுக்கு 6 வது ஊதியக்குழுவின் நன்மைகளை வழங்கப் போகின்றன.

 

1 /5

ஏப்ரல் 30, 2021 க்குப் பிறகு, பஞ்சாப் காங்கிரஸ் அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய அளவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதனுடன் இமாச்சல பிரதேசத்திலும் இது செயல்படுத்தப்படும். இமாச்சலப் பிரதேச அரசு பஞ்சாபின் கொள்கைகளைப் பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டில், பஞ்சாபில் 6 வது ஊதியக்குழுவுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை வரவுள்ளது. இதன் படி சம்பள உயர்வு செயல்படுத்தப்படும்.

2 /5

புதிய ஊதிய ஆணையத்தை செயல்படுத்த பஞ்சாப் முடிவு செய்துள்ளது. எனவே இமாச்சல அரசும் அதை செயல்படுத்தும் என்று இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார். இதன் பலனை மாநில அரசு ஊழியர்கள் பெறுவார்கள். இதற்காக, கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் அமைக்கப்பட்டு ஊழியர்களின் பிரச்சினைகள் முக்கியமாக தீர்க்கப்படும்.

3 /5

3 ஆண்டுகளில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ .2402 கோடி சலுகைகளை மாநில அரசு வழங்கியுள்ளது என்று முதல்வர் கூறினார். ஊழியர்களுக்கு அகவிலைப்படி வடிவில் ரூ .1140 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

4 /5

2003 முதல் 2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டத்தின் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியை அரசாங்கம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு சுமார் 110 கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் என்.பி.ஏ ஆகியவற்றின் பங்கை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

5 /5

2021-22 நிதியாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்தார். கொரோனா தொற்றுநோய்களின் போது பாராட்டத்தக்க வகையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.