போதையேற்றும் அழகும், திறமையும் படைத்த படைப்பாளிகளில் சிலர் போதைப்பொருள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களின் சிலர்...
மக்களுக்கு போதை தரும் பொழுதுபோக்கு ஊடகமான சினிமா பிரபலங்களில் சிலர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கின்றனர். அதிலும், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்றால் அனைவரும் அந்த விவகாரத்தை உற்று நோக்குகின்றனர். போதைப்பொருள் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய சில பாலிவுட் பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு...போத
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் (Sushant Singh Rajput) மரணம் தொடர்பான விசாரணைகள் பாலிவுட் பிரபலங்களில் பெரும்பாலோரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன. போதைப்பொருள் தொடர்பான உரையாடல்கள் மற்றும் சில ஒப்புதல் வாக்குமூலங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக சில முக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். நடிகை ரியா சக்ரபர்த்தி (Rhea Chakraborty) விசாரிக்கப்பட்டார். பிறகு அவரது காதலன் சுஷாந்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சிமோன் கம்பட்டா எஎன பலரின் பெயரை குறிப்பிட்டார், அவர்கள் போதைப்பொருள் பொருட்களை உட்கொண்டதாக ரியா தெரிவித்தார். பாலிவுட் வட்டாரத்தில் போதை மருந்துகள் பயன்பாடு மற்றும் புழக்கம் தொடர்பான புதிய செய்திகள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
2017 அக்டோபர் மாதத்தில் தனது மேலாளர் கரிஷ்மா பிரகாஷிடம் போதைப் பொருள் பற்றி பேசியது தொடர்பாக தீபிகா படுகோனே விசாரணை செய்யப்பட்டார்.
சாரா அலிகான், சுஷாந்திடம் தான் நெருக்கமாக இருந்ததாகவும், அவருடன் ‘டேட்டிங்’ சென்றதையும் என்சிபி அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார். பல முறை சுஷாந்தின் லோனாவாலா பண்ணை இல்லத்திற்கு சென்றதாகவும் சாரா தெரிவித்தார். ஆனால் போதை மருந்துகளை பயன்படுத்தியதில்லை என்று தெரிவித்தார். ஆனால் சில சமயங்களில் சிகரெட் புகைப்பதை ஒப்புக்கொண்டார். சுஷாந்த் போதைப்பொருள் உட்கொண்டதை சாரா அலிகான் உறுதி செய்தார்.
NCB அலுவ்லகத்திற்கு வெளியே ராகுல் ப்ரீத் சிங். போதைப்பொருள் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் Rhea, ராகுல் ப்ரீத் சிங் பெயரை சொன்னதால் ராகுலும் விசாரணை வளையத்திற்குள் வந்தார்.
Rheaவின் தோழியான சிமோன் கம்பட்டா ஒரு fashion designer போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக அவரும் NCBயால் விசாரிக்கப்படுகிறார்.
நடிகை ஷ்ரத்தா கபூர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று சொல்கிரார். தன் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்தார்.
நடிகர் சஞ்சய் தத் போதை மருந்து உட்கொண்டதை ஒப்புக் கொண்டார். தனது போதைப் பழக்கத்தைப் பற்றி அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.
நடிகர் ஃபர்தீன் கான் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 2001 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவர் மறைந்த பிரபல நடிகர் ஃபெரோஸ் கானின் மகன்.
பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருளை உட்கொள்வதாக கங்கனா ரனவத் கூறிய நிலையில், அவர் "போதைக்கு அடிமையானவர்" என்று கூறும் ஒரு பழைய வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியது. கங்கனா தனது சொந்த ஊரான மணாலியில் இருந்தபோது 2020 மார்ச் மாதம் நவராத்திரியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டது.