கேரளாவில் தொடரும் கனமழையால் பல பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். (PTI Photo)
கேரளாவை பொருத்த வரை இதுவரை 53,501 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களை 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். (PTI Photo)
கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன. (PTI Photo)
கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. வெள்ள நிவாரணம் தொடர்பாக கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இது தொடர்பாக கேரளா முதல்-அமைச்சர் பினராயி விஜயனுடன் ஆலோசனை செய்தேன் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரித்துள்ளார். (PTI Photo)
கேரளா மாநிலத்தில் உள்ள 58 அணைகளில் 24 அணையின் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு கடந்து விட்டது. இதனால் நீரை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (IANS Photo)
வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை தயார் நிலையில் உள்ளது. (PTI Photo)