LIC IPO Latest: சமீபத்திய காலங்களில் மிகப்பேரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள IPO-க்களில் ஒன்றாக LIC-யின் IPO உள்ளது.
2021-22 நிதியாண்டில் LIC IPO-வைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் IPO தொடர்பான ஒரு முக்கியமான செய்தி வெளிவந்துள்ளது. LIC பாலிசிதாரர்களுக்கு அரசாங்கம் 10 சதவீத பங்குகளை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.
LIC IPO 2021-22 நிதியாண்டில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2021 உரையில் அறிவித்திருந்தார். இருப்பினும், LIC IPO வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரங்களைப் பற்றி அவர் எதுவும் விளக்கவில்லை. Source: PTI
நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது LIC IPO-வின் தேதியை வெளியிடவில்லை என்றாலும், LIC IPO வெளியீட்டு தேதி குறித்து முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (DIPAM) உறுதிப்படுத்தியுள்ளது. அக்டோபர் 2021 க்குப் பிறகு LIC IPO வெளியீடு நடக்கும் என்று DIPAM செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறியுள்ளார். Source: PTI
LIC IPO வெளியீட்டு தேதி பற்றி பேசிய DIPAM செயலாளர் துஹின் காந்தா பாண்டே, "LIC IPO வெளியீடு அக்டோபர் 2021 க்குப் பிறகு நடக்கப்போகிறது" என்றார். மோடி அரசாங்கத்தின் முதலீட்டுத் திட்டங்களை வெளிப்படுத்திய பாண்டே, ஏர் இந்தியா மற்றும் பிபிசிஎல் டிஸின்வெஸ்ட்மெண்ட் அடுத்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் அதாவது 2021 செப்டம்பர் மாதத்திற்குள் செய்யப்படும் என்று கூறினார். Source: Reuters
சில சமீபத்திய ஊடக அறிக்கைகளின்படி, LIC-யின் மதிப்பு சுமார் 12.85-15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. LIC-யின் மொத்த பங்கில் 6-7 சதவிதத்தை விற்று 90,000 கோடி ரூபாயை திரட்ட மோடி அரசாங்கம் திட்டமிடுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கு (RIL) அடுத்தபடியாக, இந்தியாவின் மிக அதிக மொத்த மதிப்பு கொண்ட நிறுவனமாக LIC உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களான HDFC வங்கி, TCS, Infosys மற்றும் HUL ஆகியவையும் LIC-க்கு பிறகே வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. Source: Reuters
LIC IPO வெளியீட்டின் வெற்றி, மோடி அரசாங்கத்தின் ரூ .2.1 லட்சம் கோடி பங்கு விற்பனை இலக்குக்கு முக்கியமானது. ஏனெனில் அவர்கள் 2021-22 நிதியாண்டிற்கான நிகர விலக்கு இலக்கில் 43 சதவீதத்தை LIC IPO-விலிருந்து மட்டுமே திரட்ட திட்டமிட்டுள்ளனர். Source: Pic from LIC Handle
ஒரு மிகப் பெரிய வளர்ச்சியாக, LIC IPO தொடங்கப்படுவதற்கு முன்பு 1 கோடிக்கும் அதிகமான புதிய டிமேட் கணக்குகள் திறக்கப்படும். DIPAM செயலாளர் முன்னதாக ஒரு நேர்காணலில் LIC பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.