திடீர் பணத்தேவையா? ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள்!

Pensioner Loans At Low Interest Rates : வேலை பார்க்காதவர்களுக்கும் வங்கிகள் கடன் கொடுக்கின்றன. ஓய்வூதியதாரர்கள் (மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள்) வாங்கும் கடனுக்கு பொதுவாக செக்யூரிட்டி கேட்கப்படுவதில்லை. அதேபோல,  ஓய்வூதியக் கடன்களின் வட்டியானது, தனிநபர் கடன் வட்டி விகிதங்களை விட குறைவாக இருக்கும்.

முன்னணி வங்கிகளும் NBFCகளும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தனிநபர் கடனை வழங்குகின்றன. பிணை தேவைப்படாத கடனாக இருக்கும் இந்த கடன்களை சுலபமாக வாங்கலாம்.

1 /7

வேலையில் இல்லாத ஆனால் ஓய்வூதியம் பெறுவோருக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஓய்வூதியம் அல்லது பென்ஷன் பேமெண்ட் ஆர்டரின் அடிப்படையில் இந்த ஓய்வூதியக் கடன்கள் வழங்கப்படுகின்றன.

2 /7

ஓய்வூதியக் கடன் கோரும் விண்ணப்பதாரரின் கடன் தகுதியானது, ஓய்வூதியக் கணக்கு வைத்திருப்பவரின் ஓய்வூதியக் கணக்கு மூலம் பெறப்படும் மாதாந்திர ஓய்வூதியமாக இருக்கும்.

3 /7

ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத்தை பெறாத வங்கிகளில் இருந்து ஓய்வூதியக் கடன் அல்லது தனிநபர் கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு

4 /7

HDFC வங்கி, ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக  ₹40L வரை கடன் வழங்குகிறது. வட்டி விகிதம் 10.5% - 24% இருக்கும். கடனுக்கான செயலாக்க கட்டணம் ₹4,999 ஆகும்

5 /7

ஆக்சிஸ் வங்கியும் அதிகபட்சம் ₹40L வரை கடன் கொடுக்கிறது. வட்டி விகிதம் 10.99% - 22% என்ற அளவில் இருக்கும். கடனுக்கான செயலாக்க கட்டணம் 2% வரை இருக்கலாம்

6 /7

கோடக் மஹிந்திரா வங்கி ₹40L வரை கடன் தருகிறது. வட்டி விகிதம் 10.99% - 36% வரை வசூலிக்கப்படுகிறது. செயலாக்க கட்டணம் 3% வரை இருக்கும்

7 /7

ஐசிஐசிஐ வங்கி ₹50L வரை கடன் தருகிறது. வட்டி விகிதம் 10.8% - 16.15% இருக்கும். கடனுக்கான யலாக்க கட்டணம் 2% வரை இருக்கும்