Peas in Uric Acid: யூரிக் அமில நோயாளிகள் பச்சை பட்டாணியை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்
குளிர்காலத்தில் மக்கள் அதிகம் உட்கொள்ளும் காய்கறி பட்டாணி. ஊட்டச்சத்து மிகுந்த காயாக இருந்தாலும் பட்டாணியில் அதிக ப்யூரின் உள்ளதால் கீல்வாதப் பாதிப்பு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
குளிர்காலத்தில் பட்டாணி பச்சை பசேலென கிடைக்கும். ஆனால், நன்மையைத் தரும் உணவே, பிரச்சனையும் செய்யும் என்பதால், அதன் தன்மை அறிந்து உண்பது நல்லது. அந்த வகையில் யூரிக் அமில பாதிப்பு இருப்பவர்கள் த்தில் பட்டாணி சாப்பிடலாமா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பச்சை பட்டாணியில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதிலுள்ள வளமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. செரிமானத்திற்கு உதவும் பச்சை பட்டாணி, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
யூரிக் அமிலம் என்பது பியூரின் கொண்ட உணவுகள் செரிமானம் செய்வதால் ஏற்படும் இயற்கையான கழிவுப் பொருளாகும்
சிறுதானிய உணவுகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகள் புடலங்காய், சுரைக்காய், போன்ற காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொண்டால் யூரிக் அமிலம் குறையும் என்றால், பட்டாணியை உண்டால் யூரிக் ஆசிட் அதிகரிக்கும்
பட்டாணியில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அதிக புரதச்சத்து உள்ள பட்டாணியை யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்
யூரிக் அமிலத்தின் சிக்கல்களை பச்சை பட்டாணி நுகர்வு அதிகரிக்கக்கூடும் என்பதால், இதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குளிர்காலத்தில் பட்டாணி நன்றாக கிடைக்கும் என்பதால், யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள், அதை குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்
அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட பச்சைப் பட்டாணி, குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்றாலும் யூரிக் அமிலம் அதிகரித்து உள்ளவர்கள், அளவுடன் உட்கொண்டால் போதுமானது
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை