Online shopping Mela: ஜூலை மாதத்தில் ஷாப்பிங் மேளா! என்ஜாய்!!

ஜூலை மாதத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மேளா பெரிய அளவில் வரவிருக்கிறது. பொருட்களை வாங்க பணத்தை தயார் செய்துக் கொள்ளுங்கள். பம்பர் தள்ளுபடிகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் அருமையானது. பல ஆன்லைன் விற்பனைகளை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த தள்ளுபடி விற்பனைத் தொடங்கப் போகிறது.  லட்சக்கணக்கான தயாரிப்புகளிலிருந்து உங்களுக்கு பிடித்த பொருட்களை பெரிய தள்ளுபடியில் வாங்கலாம். ஜூலை மாதத்தில் எந்த பெரிய நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read | உலகின் முதல் கர்ப்பிணி ஆண், ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நாள்

1 /4

நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் ஜூலை 1 முதல் ஜூலை 3, 2021 வரை தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இதற்கு பிளிப்கார்ட் சூப்பர் சேவர் டேஸ் சேல் (Flipkart Super Saver Days Sale) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதியன்று பிளிப்கார்ட் மொபைல்கள் விற்பனை நடைபெறும்.  (ராய்ட்டர்ஸ்)

2 /4

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இந்திய பிரிவான அமேசான் இந்தியாவும் ஜூலை மாதத்தில் மெகா விற்பனையை அறிவித்துள்ளது. சிறு வணிக நாட்கள் விற்பனை (The Small Business Days sale) ஜூலை 2 முதல் ஜூலை 4, 2021 வரை நடைபெறும். இதில் நீங்கள் பல தனித்துவமான தயாரிப்புகளை வாங்கலாம். (ராய்ட்டர்ஸ்)

3 /4

பேஷன் தயாரிப்புகளை விற்கும் ஆன்லைன் தளமான Myntra நிறுவனத்தின் Myntra.com அடுத்த மாதம் விற்பனையை அறிவித்திருக்கிறது. ஜூலை 3 முதல் 8 வரை நடைபெறும். இதில், 50 முதல் 80 சதவீதம் தள்ளுபடியில் ஷாப்பிங் செய்ய முடியும். எச்.டி.எஃப்.சி வங்கி அட்டைகளில் 12 சதவீதம் வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். (ராய்ட்டர்ஸ்)

4 /4

அஜியோ பிக் போல்ட் விற்பனை (Ajio BIG BOLD SALE) 2021 ஜூலை 1 முதல் 5 வரை ajio.com நடைபெற உள்ளது. இதில் நீங்கள் ஃபேஷன் பிராண்ட் பொருட்களை 50 முதல் 90 சதவீதம் தள்ளுபடியில் வாங்கலாம்.  (Photo - from official website)