ஒரே நாள்ல ஹார்ட் அட்டாக் வராது! உயிருக்கே உலை வைக்கும் இந்த அறிகுறிகள் இருக்கா?

Numbness before heart attack: மாரடைப்பு என்பது திடீரென்று வராது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதயம் தனது செயல்பாட்டை மந்தமாக்கும்போது, அதற்கு முன், உடல் பல சமிக்ஞைகளைக் காட்டும். 

இந்த அறிகுறிகளை உணர்ந்து எச்சரிக்கையாக இருந்தால், மாரடைப்பைத் தவிர்க்கலாம்.உடலின் சில பாகங்களின் மரத்துப் போவதில் தொடங்கும் அறிகுறிகள், இதய செயலிழிப்பை முன்கூட்டியே காட்டுகின்றன

 

1 /7

மாரடைப்புக்கு முன் உடலின் சில பாகங்கள் மரத்துப் போகத் தொடங்குகின்றன, இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்; இல்லையெனில் உயிருக்கே ஆபத்தாகலாம்

2 /7

மருத்துவர்களின் கூற்றுப்படி, இதயம், இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாதபோது, ​​​​இதயத்துடன், அதன் சுற்றியுள்ள பகுதிகளும் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, இடுப்பின் மேல் இடது பகுதி மரத்துப் போகும். அதோடு அந்தப் பக்கத்தில் லேசான வலியும் ஏற்படுவதை காணலாம்.

3 /7

மாரடைப்புக்கு முன், இடது பக்கத்தில் உள்ள தாடையில் அது எதிரொலிக்கும். இடதுபக்க தாடையில் வலி அல்லது மரத்துப் போகும் தன்மை ஏற்படலாம். சில நேரங்களில் இரண்டும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் கவனக்குறைவாக இருக்கக்கூடாது, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்

4 /7

பல மாரடைப்பு நிகழ்வுகளில், பாதிக்கப்பட்டவரின் இடது தோள்பட்டை மரத்துப் போன நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. உண்மையில் நமது இதயம் உடலின் இடது பக்கத்தில் உள்ளது. இதயத்தில் பிரச்சனை ஏற்படும் போது, ​​உடலின் இடது பக்கத்தில் இரத்த ஓட்டம் தடைபட தொடங்குகிறது, அதன் காரணமாக அது மரத்துவிடும். இந்த அறிகுறியை யாரும் புறக்கணிக்க வேண்டாம்

5 /7

இதயத்தின் செயல்பாட்டில் சிக்கல் இருந்தால், கழுத்தின் இடது பக்கமும் பாதிக்கப்படும். இரத்த ஓட்டம் தடைபடுவதால், கழுத்தின் இடது பக்கம் மரத்துவிடும். அதோடு, படிப்படியாக வலி உணர்வு ஏற்படுகிறது. உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்.

6 /7

மாரடைப்புக்கு முன், உடலின் பல பாகங்களில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக, அந்த பகுதிகளில் உணர்வின்மை உணரத் தொடங்குகிறது. இதில் இடது கையும் அடங்கும். உங்கள் இடது கை மரத்துப் போனால், எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் இதற்கு இதய பிரச்சனை தான் காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது   

7 /7

இதயம் செயலிழக்கும்போது மூச்சுவிடுவதில் சிக்கல் ஏற்படும். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் மாரடைப்புக்கு மட்டுமே அறிகுறி என்று சொல்லிவிட முடியாவிட்டாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.