நவம்பர் மாதம் முதல் மாறும் விதிமுறைகள்! ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

நவம்பர் மாதம் முதல் அரசின் பல சேவைகளில் மாற்றங்கள் அமலுக்கு வந்தன. அவை தொடர்பான தகவல்களை இந்தப் பதிவில் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். 

இந்தியன் ரயில்வே கால அட்டவணை மாறுதல், ஜிஎஸ்டியில் எச்.எஸ்.என் குறியீடு, சிலிண்டர் டெலிவரிக்கு ஓடிபி கட்டாயமாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இன்று முதல் வந்தன.

1 /7

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், வணிக காஸ் சிலிண்டர்களின் விலை நவம்பர் 1 முதல்  ரூ.115.50 குறைந்துள்ளது. இருப்பினும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஜூலை 6ம் தேதி முதல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

2 /7

ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அரசு நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால், வரும் காலங்களில் விமான டிக்கெட் விலை அதிகரிக்கலாம். இன்று, ஏடிஎஃப் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.4842.37 என்ற அளவில் விலை உயர்ந்ததால், அதன் இன்றைய விலை ரூ.120,362.64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

3 /7

நவம்பர் 1 முதல் கேஸ் சிலிண்டர்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய உங்களுக்கு OTP தேவைப்படும். சிலிண்டரை முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். இதை சொன்னால்தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.

4 /7

ஐஆர்டிஏவும் நவம்பர் முதல் தேதியில் இருந்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1 முதல், காப்பீட்டாளர்கள் KYC விவரங்களை வழங்குவது அவசியமாகிவிட்டது. தற்போது, ​​ஆயுள் அல்லாத காப்பீட்டு பாலிசியை வாங்கும் போது KYC கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும்

5 /7

நவம்பர் முதல், 5 கோடிக்கும் குறைவான வருவாய் உள்ள வரி செலுத்துவோர், ஜிஎஸ்டி ரிட்டனில் 5 இலக்க HSN குறியீட்டை உள்ளிட வேண்டும். இதுவரை 2 இலக்க HSN குறியீடு உள்ளிடப்பட்டது. முன்னதாக, ஏப்ரல் 1, 2022 முதல், 5 கோடிக்கு மேல் வருவாய் உள்ள வரி செலுத்துவோருக்கு நான்கு இலக்க குறியீடு கட்டாயமாக்கப்பட்டது. இதற்குப் பிறகு, ஆகஸ்ட் 1, 2022 முதல் ஆறு இலக்கக் குறியீட்டை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டது.

6 /7

டெல்லியில் நவம்பர் 1ம் தேதி முதல் மின்சார மானியம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், மின் மானியத்திற்கு பதிவு செய்யாத மக்களுக்கு அதன் பலன் கிடைக்காது. மானியத்திற்கான பதிவுக்கான கடைசி தேதி 31 அக்டோபர் 2022 ஆகும். இருப்பினும், இது மேலும் நீட்டிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

7 /7

நவம்பர் 1 முதல் அனைத்து ரயில்களின் கால அட்டவணையையும் இந்திய ரயில்வே மாற்றியுள்ளது.