பழங்குடி இனத்தவருடன் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!

NO FOOD WASTE நிறுவனம் தை பொங்கல் தமிழர் விழாவை இரும்புளியூரில் உள்ள பழங்குடி இனத்தவருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

1 /5

NO FOOD WASTE, சென்னை பிரிவு தன்னார்வல நிறுவனம், விழா மற்றும் உணவகங்களில் மிதமாக நல்ல நிலையில் உள்ள, உண்ணக்கூடிய நிலையில் உள்ள உணவை பெற்று அதை பசியில் உள்ளோருக்கு அளிக்கிறது.  

2 /5

தை பொங்கல் தமிழர் விழாவை, "இரும்புளியூரில் உள்ள பழங்குடி இனத்தவருடன்" பொங்கல் கொண்டாடி உள்ளனர்.  சுமார் 50 குடும்பங்கள் உள்ள இடத்திற்கு சென்று அவர்கள் அனைவரும் பங்கு பெற்று சிறப்பாக நடந்தது.  

3 /5

சுமார் 25 க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கோலம், நடனம், பாடல், வாலி பால் விளையாட்டுகள் நடத்தப்பட்டது. பாரம்பரிய விளையாட்டான உறியடி, கரும்பு உடைத்தல் விளையாட்டு நடந்தது.  வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் மற்றும் பேனா பென்சில் போன்றவை கொடுக்கப்பட்டது.  

4 /5

பெண்களுக்காக "பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ( Women Empowerment)" பற்றிய விழிப்புணர்வு பற்றி பலவற்றை பகிர்ந்து கொண்டனர்.  

5 /5

சிறுவர்களுக்கு Food Security உணவு பாதுகப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றி பலவற்றை எடுத்து கூறினர்.