Negative Effects Of Eating Dragon Fruit : வைட்டமின் சி உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டிராகன் பழம் புற்றுநோய், நீரிழிவு போன்ற பல நோய்களை நம்மிடமிருந்து விலக்கி வைக்க உதவுகிறது என்றாலும், இந்தப் பழத்தை உட்கொள்வதால் சில தீமைகளும் ஏற்படும்...
ஆரோக்கியமாக இருந்தாலும், டிராகன் பழத்தை சாப்பிடுவது அனைவருக்கும் பாதுகாப்பானது அல்ல, இந்த பழத்தின் தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்.
டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவாக குணமடைய, டிராகன் பழம் சாப்பிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவிலும் பயிரிடப்படும் டிராகன் பழத்தில் கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்பு போன்ற பல சத்துக்கள் இருந்தாலும், டிராகன் ஃப்ரூட் சாப்பிடுவதால் சில தீமைகளும் ஏற்படுகின்றன
டிராகன் பழத்தில் உணவு நார்ச்சத்துடன் இயற்கை சர்க்கரையும் சேர்ந்தே உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
டிராகன் பழத்தின் வெளிப்புற தோலை எடுத்துவிட்டு தான் உட்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் கருப்பு நிற விதைகள் உடலுக்கு நல்லது என்றாலும் அனைவருக்கும் நன்மையென்று சொல்ல முடியாது
டிராகன் பழ சாகுபடியின்போது பல வகையான பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. எனவே, டிராகன் பழத்தின் தோலை உட்கொண்டால், அது வயிற்றுப்போக்கு ஏற்பட காரணமாகும்.
டிராகன் பழத்தை சாப்பிடுவது ஒவ்வாமை பிரச்சனையை அதிகரிக்கும். உடலில் வீக்கம் அதிகரித்து, சருமத்தில் அரிப்பு, சொறி போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும். அதிலும் ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் டிராகன் பழத்தைத் தவிர்க்க வேண்டும்
டிராகன் பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதால் இரத்த அழுத்த நோயாளிகளின் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை