Cholesterol Control Tips: இந்த நவீன உலகில் மனித உடலை பாதிக்கும் நோய்களில் உயர் கொலஸ்ட்ராலும் ஒன்று. இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.
Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக இந்த நாட்களில் பலர் அதிக கொலஸ்ட்ராலால் அவதிப்படுகிறார்கள். கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது. இது தவிர, கொழுப்பு உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கத் தொடங்குகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால், அது இதய நோய்கள், மாரடைப்பு போன்ற சில தீவிர நோய்களை ஏற்படுத்தக்கூடும். ஆகையால் இதை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம். சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க முடியும்.
நாம் தினமும் சமையலில் சேர்க்கும் சில எளிய உணவுகளை கொண்டே கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க முடியும். இவை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவும் சில ஆரோக்கியமான எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தினை வகைகளில் கம்பு கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக நார்ச்சத்து இருக்கின்றது. தினையை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அதை வேகவைத்து, அதில் சிறிது வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது கல் உப்பு அல்லது கருப்பு உப்பு சேர்த்து உட்கொள்ளலாம். தினமும் 1 கிண்ணம் அளவு கம்பை உட்கொள்வது கொலஸ்ட்ராலை விரைவாகக் குறைக்க உதவியாக இருக்கும்.
தினமும் டயட்டில் பூண்டை சேர்த்துக்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கும். பூண்டை பல வகைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள ஆரோக்கிய நன்மைகளால் பல வித உடல் உபாதைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும். கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் கண்டிப்பாக இதை உட்கொள்ள வேண்டும்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வேகவைத்த கொண்டைக்கடலையை உட்கொள்ளலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைகக் உதவுவதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு அளிக்கின்றது. இதை சாலட், சப்ஜி, சுண்டல் என பல வகைகளில் செய்து சாப்பிடலாம். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சேர்த்து மாலை சிற்றுண்டியாகவும் உட்கொள்ளலாம்.
பெர்ரி வகை பழங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய வகையில் உதவும். புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகை பழங்கள் இதயத்திற்கும் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. பெர்ரி வகைகளில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றன.
காய்களில் பச்சை பீன்ஸ் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மிக சிறந்ததாக கருதப்படுகின்றது. இதை அவ்வப்போது உட்கொள்வது கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய அளவில் உதவும். இதில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால், இது வயிற்றுக்கும் நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதில் உடலுக்கு தேவையான அதிக ஊட்டச்சத்துகளும் உள்ளன.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் அதை கட்டுப்படுத்த, முழு தானியங்களை உட்கொள்ளலாம். கினோவா, கோதுமை, தினை போன்ற முழு தானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வெந்தயத்தை வேகவைத்து உட்கொள்ளலாம். இது அதிக நன்மை பயக்கும். கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமின்றி இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் இது உதவுகிறது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கல் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.