நவராத்திரியில் கொலு வைப்பது மிகவும் சிறப்பு. சம்பிரதாயத்திற்காக மட்டுமல்லாமல், கலையுணர்வை வெளிப்படுத்தும் விதத்திலும் கொலு வைக்கப்படுகிறது.
பெங்களூருவில் பாக்யலட்சுமி என்ற பெண், தனது வீட்டில் 'மகாபாரதம்' என்ற கருப்பொருளில் கொலு வைத்துள்ளார். அதில் மகாபாரத கதாபாத்திரங்கள் தொடர்பான முக்கியமான காட்சிகளை அவர் சித்தரித்துள்ளார்.
Also Read | சிவனுக்கு சிவராத்திரி ஒன்றே! அன்னைக்கோ ஒன்பது நாள் நவராத்திரி
Pictures courtesy: Twitter
கிட்டத்தட்ட 10,000 பொம்மைகளைக் கொண்டு வீட்டில் கொலு வைத்துள்ளார் பாக்கியலட்சுமி.
தியாகராஜ் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்ட கொலுவில் நூறு ஆண்டுகளுக்கும் அதிக பழமையான பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன.
தென்னிந்தியர்கள் குறிப்பாக பழைய மைசூர் பகுதியில் தசரா பொம்மைகளால் தங்கள் வீட்டை அலங்கரிப்பது பாரம்பரியமானது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நவராத்திரி கொலு வைத்தோம் என்கிறார் பாக்கியலட்சுமி. இரண்டு வருடங்களுக்கு பிறகு கொலு வைப்பதால் சுமார் 250 பொம்மைகளைப் வாங்கி, கொலு வைக்க திட்டமிட முடிந்தது என்கிறார் கொலு வைப்பதில் ஆர்வம் கொண்ட பாக்கியலட்சுமி.
வெளிநாடுகளில் இருந்து வாங்கிய பொம்மைகள் உட்பட 50,000 பொம்மைகள் வைத்திருக்கும் பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் 60 வருடங்களாக கொலு வைத்து வருகின்றனர்