இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி (MS Dhoni ) சனிக்கிழமை (ஜூலை 30) புதிய சிகை அலங்காரம் மற்றும் தாடி தோற்றத்துடன் உள்ள புகைப்படங்கள் மிகவும் வைரலாகியது. தல தோனி தனது வித்தியாசமான ஹேர் ஸ்டைலால், ரசிகர்களை திகைக்க செய்வது இது முதல் முறை அல்ல, பல முறை அவர் இவ்வாறு திகைக்க வைத்துள்ளார்.
எம்எஸ் தோனியின் சமீபத்திய தோற்றம்: தாடியுடன் உபெர்-கூல் ஃபாக்ஸ்-ஹாக் கட்டிங் மூலம் தல தோனி, தான் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, ராக் ஸ்டாரும் கூட என ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார்
தோனி நன்கு ட்ரிம் செய்யப்பட்ட முடி மற்றும் தாடியுடன் சிறிது காலம் 'மேக்கோ' 'macho' தோற்றத்தில் இருந்தார்
2018 ஆம் ஆண்டில், தோனி, முதன்முறையாக, 'salt and pepper look' வெளிப்படுத்தினார், இது கருப்பு மற்றும் நரை முடியின் கலவையைக் காட்டுகிறது. 'கூல் கேப்டனுக்கு' வயதாகி விட்டது என்பதை ரசிகர்கள் உணர்ந்தது அதுவே முதல் முறை.
2013 ஐபிஎல் போட்டியின் போது, தோனி தனது ‘mohawk’ சிகை அலங்காரத்தை வெளியிட்டதன் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார், இந்த ஸ்டைலில் தலையின் நடுப்பகுதியில் மட்டுமே முடி இருக்கும். இரு பக்கங்களும் முற்றிலும் நீக்கப்பட்டிருக்கும்.
ICC உலகக் கோப்பை 2011 வெற்றிக்குப் பிறகு, MSD ஆன்மீக காரணங்களுக்காக கிட்டத்தட்ட மொட்டை போட்டிக் கொண்டிருந்தார். நரை முடி இருந்ததால் அவர் முதல் முறையாக அனுபவம் வாய்ந்தவராகவும் வயதானவராகவும் தோற்றம் அளித்தார்.
ICC உலகக் கோப்பை 2011 வெற்றிக்குப் பிறகு, MSD ஆன்மீக காரணங்களுக்காக கிட்டத்தட்ட மொட்டை போட்டிக் கொண்டிருந்தார். நரை முடி இருந்ததால் அவர் முதல் முறையாக அனுபவம் வாய்ந்தவராகவும் வயதானவராகவும் தோற்றம் அளித்தார்.
2005 ஆம் ஆண்டில், எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில், முதல் குறையாக வண்ணங்கள் பூடப்பட்ட தலை முடியுடன் ஆடினார். 2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவரது நீண்ட கூந்தல் ஒரு பேஷன் ஸ்டேட்மெண்டாக மாறியது, அந்த சமயத்தில் பாகிஸ்தானின் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் அதை நீக்க வேண்டாம் என்று தோனியிடம் அறிவுறுத்தினார்.