உங்கள் உடலில் புரத சத்து குறைவாக இருந்தால், அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நமது எலும்புகள், தோல், முடி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த புரதம் அவசியம்.
உடலில் புரதம் இல்லாததால் பல வகையான பிரச்சனைகள் எழலாம். இது எடிமாவுக்கு வழிவகுக்கும். எடிமா ஏற்பட்டால், உங்கள் உடலின் எந்தப் பகுதியும், குறிப்பாக கால்கள் வீங்க தொடங்குகிறது. இதற்கு அல்புமின் குறைபாடு காரணமாகும். அல்புமின் என்பது இரத்தம் அல்லது இரத்த பிளாஸ்மாவில் உள்ள ஒரு புரதமாகும்.
புரதத்தின் குறைபாட்டினால் முடி உதிர்கிறது. புரதம் குறைபாடு தோல் மற்றும் நகங்களையும் பாதிக்கிறது. புரதம் இல்லாததால், தோல் வெடிப்புகள் ஏற்படலாம். நகங்களும் பலவீனமடைகின்றன.
புரதக் குறைபாடு உடலில் தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில், புரத சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது.
புரதக் குறைபாடு எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கிறது. இது எலும்புகளை பலவீனப்படுத்துவதால், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
புரத சத்து குறைபாடு, கல்லீரல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இதனால், கல்லீரல் செல்களில் கொழுப்பு சேர்கிறது. இது கல்லீரல் வீக்கம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கல்லீரல் பிரச்சனை உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் ஏற்படுகிறது.