ஜூலை மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜவாழ்க்கை... முழு ராசிபலன் இதோ

Monthly Horoscope, July 2023: இன்னும் சில நாட்களின் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் ஜோதிட ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த கிரக மாற்றங்களின் தாக்கம் அனத்து ராசிகளிலும் காணப்படும். இவற்றால் சில ராசிகளுக்கு அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படும். சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஜூலை மாதம் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமாக இருக்கும்? எந்தெந்த ராசிகளுக்கு பாதகமாக இருக்கும்? ஜூலை மாதத்துக்கான முழு ராசிபலனையும் இந்த பதிவில் காணலாம்.  

1 /12

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்கள் பிள்ளைகளுடனான உறவில் இனிமை இருக்கும். இந்த மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சில பிரச்சனைகள் வரலாம். பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். 

2 /12

ரிஷபம்: இந்த மாதம் உங்கள் குடும்பச் சூழல் சற்று குழப்பமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்படலாம். நிதி சிக்கல்கள் இருக்கும். எனவே புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  

3 /12

மிதுனம்: மாத தொடக்கத்தில் சில நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த மாதம் நிதி விஷயங்களில் இழப்பு ஏற்படலாம், செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலையில் தடைகளையும் சந்திக்க வேண்டி வரும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

4 /12

கடகம்: வேலை மாற வேண்டும் என்றால் முயற்சி செய்யலாம், நிச்சயம் வெற்றி கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வீண் செலவுகள் அதிகரிக்கும். மாதம் முழுவதும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த மாதம் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். ரியல் எஸ்டேட் விஷயத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். 

5 /12

சிம்மம்: சிம்ம ராசிக்கு ஜூலை மாதம் வாழ்க்கையில் உற்சாகம் இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்கள் தொழிலிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். பொறுமையுடன் செயல்பட்டால் சச்சரவுகள் மற்றும் எதிரிகளிடம் வெற்றி கிடைக்கும். உங்கள் மரியாதை குறையலாம். பண விஷயத்தில் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.   

6 /12

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு பண பலன்கள் கிடைக்கும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலை கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகளில் நேரத்தை செலவிடுவார்கள்.

7 /12

துலாம்: இந்த மாதம் உங்களுக்கு எல்லாம் சாதாரணமாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். மாணவர்களுக்கும் அனுகூலமான காலமாக இது இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களுக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். 

8 /12

விருச்சிகம்: வீட்டில் ஒருவரின் உடல்நிலை மோசமடையலாம். அதனால் வீட்டில் உள்ளவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். விருச்சிக ராசியினருக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சில புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். இந்த மாதம் வீடு, மனை வாங்கலாம். இந்த மாதம் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். 

9 /12

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான மாதம். இந்த நேரத்தில், உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். இந்த மாதம் உங்கள் வேலையில் திருப்தி அடைய சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். கலைத் துறையில் வெற்றி பெறலாம். எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் போன்றவர்களுக்கு மிகவும் திருப்திகரமான நேரமாக இது இருக்கும். உத்தியோகத்தில் அதிகப்படியான வேலை காரணமாக சோர்வாக உணர்வீர்கள். தொழிலதிபர்கள் இந்த மாதம் பண பரிவர்த்தனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும், 

10 /12

மகரம்: குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இந்த மாதம் நீங்கள் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காட்டலாம், சிலர் புனித யாத்திரை செய்யலாம். இந்த மாதம் வியாபாரத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.கூட்டு தொழிலில் ஈடுபட்டால் அதிலும் லாபம் இருக்கும். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.

11 /12

கும்பம்: இந்த மாதம் உங்கள் மன உறுதி அதிகரிக்கும். உங்கள் தொழிலில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்திலும் வெற்றி உண்டாகும். சில புதிய திட்டங்களை தீட்டி செயல்படுவீர்கள். இந்த மாதம், நல்லொழுக்கத்துடன் உங்கள் வேலையில் கவனம் செலுத்துவீர்கள். மதம் மற்றும் ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படலாம். கோபமும் அதிகமாக இருக்கும். குடும்பத்துடனான உங்கள் உறவுகள் கெட்டுப்போகலாம். 

12 /12

மீனம்: உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். மீன ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் இந்த மாதம் சாதகமாக இருக்கும். கல்வித் துறையில் வெற்றி பெறுவீர்கள். வியாபார ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் புதிய வேலை கிடைக்கும்.