Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவாகும். கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது. உடல் பருமன், இதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகள் இதனால் ஏற்படுகின்றன. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். காலை வேளையில் சில சிறப்பு பானங்களை குடிப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம்.
அதிக கொலஸ்ட்ரால் ஒரு அமைதியான கொலையாளியை போன்றது. ஆகையால் இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்க காலையில் குடிக்க வேண்டிய சில பானங்கள் பற்றி இங்கே காணலாம்.
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரை குடிப்பது மிக நல்லது. இது கொழுப்பை கரைத்து, செரிமானத்தை சீராக்குகிறது, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இதை தினமும் குடிக்கலாம்.
க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்ற ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
எலுமிச்சை நீர்: வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து காலையில் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
மஞ்சள் பால்: மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும், எலும்பு ஆரோக்கியத்தயும் மேம்படுத்துகின்றது.
இஞ்சி டீ: இஞ்சியில் எல்டிஎல் கொழுப்பை குறைக்கும் பண்புகள் உள்ளன. இது செரிமானத்தை சீராக்கி, கலோரிகளை எரித்து, எடையை குறைக்கவும் உதவுகின்றது.
பீட்ரூட் சாறு: ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நைட்ரேட்கள் அதிகம் உள்ள பீட்ரூட் சாறு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது. இது ஒட்டுமொத்த உடல் ஆரொக்கியத்தையும் மேம்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.