புதிய மெர்சிடிஸ் கார் இந்தியாவில் அறிமுகமானது! விலை 2.35 கோடி ரூபாய் மட்டுமே

மிகவும் எதிர்பார்க்கபப்ட்ட Mercedes-AMG SL55 ரோட்ஸ்டர் ஆடம்பர சொகுசுக்கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது   

2.35 கோடி ரூபாய் விலையில் இந்தியாவில் அறிமுகமான மெர்சிடிஸ் AMG SL55 கார், 3.9 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும். இந்தியாவின் புதிய சொகுசுக்காரின் சிறப்பம்சங்கள் என்ன?

Photo Credit - Mercedes Website

1 /8

Mercedes-AMG SL55 Roadster கார், கடந்த ஆண்டு உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது இந்த கார் CBU மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளது

2 /8

முழுமையான பில்ட் யூட்டிலிட்டி. அதாவது, இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

3 /8

இந்த காரில் ஸ்வெட்பேக் LED ஹெட்லேம்ப்கள், Panamericana கிரில், பளபளப்பான கருப்பு ORVMகள், 20 இன்ச் அலாய் வீல்கள், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் பிரேக் காலிப்பர்கள், குவாட்-டிப் எக்ஸாஸ்ட்கள், சரிசெய்யக்கூடிய ஸ்பாய்லர் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில்லைட்கள் உள்ளன.

4 /8

கருப்பு, சாம்பல் மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கார் கிடைக்கிறது 

5 /8

காரின் சாஃப்ட் டாப் 15 வினாடிகளில் திறக்கப்படும் 

6 /8

Mercedes-AMG SL55 ரோட்ஸ்டரின் உட்புறம்  இந்த காரில் AMG செயல்திறன் இருக்கைகள் உண்டு. கார்பன்-ஃபைபர் போன்ற பூச்சு கிடைக்கும். இது தவிர, முழு டிஜிட்டல் கருவிகள் கன்சோல், 11.9-இன்ச் தொடுதிரை அமைப்பு, சுற்றுப்புற விளக்குகள் மற்றும் HUD ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.

7 /8

SL55 AMG பல பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது. இது 8 ஏர்பேக்குகள், ப்ரீ சேஃப் சிஸ்டம், பாதசாரி பாதுகாப்பு, ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைப் பெறுகிறது

8 /8

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜினை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த எஞ்சின் 473bhp மற்றும் 700nM டார்க்கை உருவாக்குகிறது. இது தவிர, கார் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது, இது 3.9 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 295 கிமீ ஆகும்.