Men Infertility: திருமணமான ஒவ்வொரு ஆண்மகனும் தான் ஒரு தந்தையாக வேண்டும் என விரும்புகிறார். எனினும் இந்த ஆசை அனைவருக்கும் எளிதாக நிறைவேறுவதுல்லை. உங்கள் உணவு முறை சரியில்லாமல் இருந்தால் அல்லது நீங்கள் தவறான உணவுகளை உட்கொண்டால், உங்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். மாறிவரும் வாழ்க்கை முறையும் நம் உணவை பாதிக்கிறது. இதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
ஆண்களின் விந்தணுக்களின் தரம் குறைவது மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. ஆகையால் ஆண்கள் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வது முக்கியமாகும். ஆண்கள் எந்தெந்த பொருட்களை உட்கொண்டால், மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
குழந்தையின்மை பிரச்சனையைத் தவிர்க்க, அதிகமாக இனிப்புப் பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இனிப்புகளை சாப்பிடுவதால் உடல் எடை கூடும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் உயர்கிறது. இது விந்தணுக்களின் தரத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இனிப்புகளுடன் பேஸ்ட்ரி, கேக், சாக்லேட் பிஸ்கட், செயற்கை இனிப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
துரித உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளில் இருந்து விலகி இருங்கள். அதிக சோடியம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்
புகைபிடித்தல் விந்தணுக்களின் தரத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது, புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான வழிகளை பின்பற்ற வேண்டும். இது தவிர, நீங்கள் புகையிலை குட்கா போன்றவற்றையும் உட்கொள்ளக்கூடாது. இது குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கூடுதலாக, அதிகப்படியான குடிப்பழக்கம் விந்தணுக்களின் இயக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், விந்தணுவின் அளவு மற்றும் கட்டமைப்பையும் பாதிக்கிறது. அதிகமாக மது அருந்துவது விந்தணுக்களின் தரத்தை பாதிக்கிறது. ஆண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவையும் இது குறைக்கிறது.