சூரியன்-சனி சேர்க்கை: இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க நன்மை, ராஜவாழ்க்கை!!

Surya Shani Yuti 2023: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் மாதம் 6 ஆம் தேதி அவர் உதயமாவார். பிப்ரவரி 13 அன்று, சூரியன், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார். இதன் காரணமாக இந்த ராசியில் தந்தை மற்றும் மகன் சேர்க்கை உருவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில், அஸ்தமன நிலையில் இருக்கும் சனி பகவானின் ஆற்றல் குறையும், சூரியபகவானின் ஆற்றல் அதிகமாக இருக்கும். 

1 /8

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், இந்த கிரக சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /8

மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாக இருக்கும். ரத்த அழுத்தம், மூட்டு, நரம்பு சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். 

3 /8

ரிஷப ராசிக்காரர்களின் உறவினர்கள், நண்பர்களுடன் உறவுநிலை மேம்படும். காதல் வாழ்க்கையும் மேம்படும். இதனுடன் வாழ்க்கைத் துணையுடனான உறவும் வலுவாக இருக்கும். நிதி பிரச்சனைகளும் நீங்கும். 

4 /8

நீங்கள் சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகள் அல்லது துக்கங்களிலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். நல்ல செய்திகளும் கிடைக்கும். எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

5 /8

இந்த காலகட்டம் உங்களின் நிதி நிலையை பலப்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்களுக்கு நீண்ட கால பலன்களை தரும். நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தால் அதுவும் இப்போது உங்களுக்கு சாதகமாக அமையும்.

6 /8

தற்போது விருச்சிக ராசிக்காரர்கள் சனி தசையின் தாக்கத்தில் உள்ளார்கள். இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு நீங்கள் அதிலிருந்து விடுபட வாய்ப்பு கிடைக்கும். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான வியாபாரமும் உங்களுக்கு லாபத்தைத் தரும்.

7 /8

கும்பம் ராசிக்காரர்களுக்கு அரசு வேலைகள் ஏதேனும் தடைபட்டிருந்தால், அது இப்போது நிறைவேறும். பில்டர், ஜிம், ஸ்டீல் அல்லது இரும்பு வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் பலன் பெறுவார்கள். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும்.

8 /8

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.