Ginger For Weight Loss: உடல் எடையை குறைப்பது இந்த நாட்களில் பெரிய சவாலாக உள்ளது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு விஷயமாகும்.
Ginger For Weight Loss: இஞ்சியில் உள்ள ஆரோக்கிய பண்புகள் பல வித செயல்பாடுகள் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. உடல் எடையை குறைக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும், நல்ல தூக்கத்தைப் பெற வேண்டும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க வேண்டும், கலோரி அளவு குறைய வேண்டும். இவை அனைத்திலும் இஞ்சி உதவுகின்றது.
இஞ்சி பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது நம் சமையலில் பல வித உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இஞ்சி உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிப்பதோடு, இதில் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை பல வழிகளில் உட்கொள்ளலாம்.
உடல் எடை குறைய தேவையான செயல்பாடுகளுக்கு இஞ்சி உதவுகிறது. பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய இஞ்சி நீரை தினமும் குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் பல வித நன்மைகள் மற்றும் அதன் மூலம் உடல் எடையை குறைக்கும் வழி பற்றி இந்த பதிவில் காணலாம்.
காலையில் இஞ்சி தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. காலையில் இதை குடிப்பதன் மூலம் நாள் முழுவதும் ஆற்றல் நிலை நன்றாக இருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து நாள் முழுவதும் உடலில் ஏற்படும் சோர்வை தவிர்க்கிறது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இஞ்சி உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. இதன் மூலம் அதிகமாக சாப்பிடுவதும் கட்டுப்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் குறைவதும் பசியைத் தூண்டும். இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்போது, அது கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது.
உங்கள் பசியை கட்டுப்படுத்தி வயிற்றுக்கு திருப்திகரமான உணர்வை அளிக்க இஞ்சி உதவுகிறது. இது பசியின் அளவைக் குறைக்க உதவுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் கலோரி அளவு குறையும் போது, அது எடையை குறைக்க உதவுகிறது. இஞ்சி செரிமானத்தை சீராக்கி ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. இஞ்சி உட்கொள்வதால் பசியின் அளவை கட்டுப்படுத்தலாம்.
நாள்பட்ட அழற்சி இருப்பவர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
இஞ்சி உடலில் தெர்மோஜெனீசிஸை அதிகரிக்க உதவுகிறது. இது கலோரிகளை எரிக்க உதவும் உடல் வெப்பத்தை உருவாக்கும் ஒரு செயல்முறையாகும். இஞ்சி உடலில் தெர்மோஜெனீசிஸை மேம்படுத்தி, அதன் மூலம் அடித்தள வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவும். இதனால் நாம் எரிக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
இஞ்சி வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் உள்ளது. இவை இரண்டும் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்த உதவுகின்றன. தினமும் இஞ்சி உட்கொள்வதால், உடலில் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு ஆரோக்கியம் மேம்படும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.