Sugarfree Tablets: இதய நோய் முதல் புற்றுநோய் வரை... செயற்கை இனிப்புகளின் அதிர வைக்கும் பாதிப்புகள்!

Side Effects Of Sugarfree Tablets: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

செயற்கை இனிப்புகளை நீரழிவு நோயாளிகள் மட்டுமே, உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும் பெரும்பாலானோருக்கு அதன் பக்க விளைவுகளை பற்றி தெரிவதில்லை.

1 /8

செயற்கை இனிப்புகள்: பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள், சர்க்கரைக்கு பதிலாக, செயற்கை இணைப்புகளை பயன்படுத்திகின்றனர். கலோரி அதிகம் உள்ள சர்க்கரைக்கு பதிலாக, குறைந்த கலோரி கொண்ட, இனிப்பு சுவை நிறைந்த செயற்கை இனிப்புகளில் சுக்ரலோஸ், சீனித்துளசி மற்றும் சாக்கரின் ஆகியவை அடங்கும். 

2 /8

செயற்கை இனிப்புகள் பக்க விளைவுகள்: ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில், நமக்குள்ளும் கல்லூரி அளவை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், செயற்கை இணைப்புகளை பலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள், தீவிர ஆரோக்கிய பாதிப்புகளை உண்டாக்கும்.

3 /8

இதய நோய்கள் ஏற்படும் அபாயம்: செயற்கை இனிப்புகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதோடு,  பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தையும் அதிகரிக்கிறது.

4 /8

உடல் பருமனை அதிகரிக்கும் செயற்கை இனிப்புகள்: செயற்கை இனிப்புகள் மிகக் குறைந்த கலோரி கோண்டவை என்றாலும்,  உடலின் இயற்கை திறனை மோசமாக பாதிக்கிறது. இதனால், நாம் நம்மை அறியாமல்,  அதிக உணவை சாப்பிடுவோம். எனவே உடல் எடை இதனால் குறையாது. உடல் பருமனை தவிர்க்க விரும்பினால் முடிந்தவரை செயற்கை இனிப்பிலிருந்து விலகி இருங்கள்.

5 /8

செரிமானத்தை சீர்குலைக்கும் செயற்கை இனிப்புகள்: செயற்கை இனிப்புகள் பாக்டீரியா வளர்ச்சியை தூண்டுவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை சீர்குலைக்கும்.  வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை எதிர்மறையாக பாதித்து வயிற்றில் கோளாறுகளை உண்டாக்கும். 

6 /8

புற்றுநோய் ஏற்படும் அபாயம்: செயற்கை இனிப்புகள் மற்றும் புற்றுநோய்க்கு இடையேயான தொடர்பைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சில ஆய்வுகள் சிறுநீர்ப்பை புற்றுநோய் மற்றும் லிம்போமா என்னும் ஒரு வகை ரத்த புற்று நோய் ஏற்படும் வாய்ப்பை செயற்கை இனிப்புகள் அதிகரிப்பதாக கூறுகின்றன.  

7 /8

இனிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்: இனிப்புக்கு மாற்றாக செயற்கை இனிப்பைக் கருதலாம் என்றாலும், அதை அதிகமாக உட்கொண்டால், இனிப்புகளை உண்ணும் ஆசை கணிசமாக அதிகரிக்கும் . இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.