புதன் கோச்சாரம் 2022: புத்திசாலித்தனம், பணம், தர்க்கம், வியாபாரம் ஆகிய காரணிகளின் கிரகமான புதன் கிரகம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ராசியை மாற்றப் போகிறது. புதனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 5 ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 2022 மிக அற்புதமாக அமையும். இவர்களுக்கு ஆகஸ்டில் பெரும் வெற்றி கிடைக்கும். அதிகப்படியான பண வரவு இருக்கும். புதன் கிரகம் தற்போது கடகத்தில் உள்ளது. ஆகஸ்ட் 1, 2022 அன்று சிம்ம ராசியில் நுழைகிறது. சிம்ம ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது 5 ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். இந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி காணலாம்.
புதனின் மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழிலில் நன்மை தரும். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கும். பயணம் செல்ல வாய்ப்புகள் ஏற்படும். இந்த பயணத்தால் சாதகமான விளைவுகள் ஏற்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மன மகிழ்ச்சியையும் அமைதியையும் உணர்வீர்கள். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலிக் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மேல் அதிகாரிகள் உதவுவார்கள்.
குடும்பத்தில் ஆன்மீக நிகழ்வுகள் ஏற்படலாம். வேலை அல்லது கல்வி நிமித்தமாக சுற்றுலா செல்லக்கூடும். கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் மாற்றம் வரலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குடும்பத்தில் ஆன்மீக நிகழ்வுகள் ஏற்படலாம். வேலை அல்லது கல்வி நிமித்தமாக சுற்றுலா செல்லக்கூடும். கன்னி ராசிக்காரர்களுக்கு தொழிலில் மாற்றம் வரலாம். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மூத்தவர்களின் உதவியால் தொழிலில் நன்மைகள் உண்டாகும். பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமான இருக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். நீங்கள் முன்னேற பல வாய்ப்பு இப்போது கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் ஆன்மீக நிகழ்வுகள் நடைபெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)